பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

சக்கரவர்த்தி சுந்தரபாண்டியனது கல்வெட்டு ஒன்றில் “சோனகற்கு சீவிதமாக அடைந்த நாளில்” என அவர்கள் பாண்டிய நாட்டில் புகலிடம் பெற்றதைக் குறிப்பிடுகிறது.[1] பாண்டியன் கோனேரின்மை கொண்டனாது திருப்புல்லானிக் கோயில் கல்வெட்டு, “பவுத்திர மாணிக்கப் பட்டினத்து சோனக சாமந்தப் பள்ளிக்கு” சில ஊர்களை இறையிலியாக வழங்கப்பட்ட ஆணையைத் தெரிவிக்கிறது.[2]

இதனை, அந்தந்த நூற்றாண்டுகளில் எழுந்த தமிழ் இலக்கியக் குறிப்புகளும், உறுதிப்படுத்துகின்றன. பதினைந்தாவது நூற்றாண்டு இஸ்லாமிய இலக்கியமான பல்சந்தமாலை, சோனகர் தமிழக வாணிபத்தில் வளர்ந்தோங்கி விளங்கியதுடன், தமிழ் மண்ணுக்குரிய தண்ணளியிலும், தாளாண்மையிலும் மிக்கு நின்றதைச் சுட்டிக் காட்டுகிறது.

“வானது நாணக் கொடையாலுலகை வளர்த் தருளும்
சோனகர் வாழும் செழும்பொழில் .... ....”

என ஈதலற்த்திற்கு இலக்கணமான மாரியை நாணுமாறு இஸ்லாமியரது கொடை வாழ்க்கை அமைந்து இருந்ததைக் கோடிடுகிறது.[3] இத்தகு செழுமையான சமுதாயத்தில், பிற்காலத்தில் ஈய்ந்து சிவந்த இருகரத்து சீதக்காதி வள்ளல் தோன்றியதில் வியப்பு இல்லைதான். பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான பெரும்பற்றப் புலியூரார் தமது திருவாலவாயுடையார் புராணத்தில் சோனகரை குறிப்பிட்டுள்ளார்.[4] பதின்மூன்றாவது நூற்றாண்டு பேரிலக்கியமான இராமாயணம் - சுந்தரகாண்டம் ஊர்தேடு படலத்தில் சோனகர் மனை பற்றிய குறிப்பு உள்ளது.[5] பதினான்காவது நூற்றாண்டு உரை ஆசிரி


  1. AR 402 / 1903 (திருப்புல்லாணி)
  2. களவியற் காரிகை - வையாபுரிப்பிள்ளை (பதிப்பு) 1931
  3. திருவாலவாயுடையார் புராணம்-டாக்டர் உ.வே. சாமிநாதஐயர் பதிப்பு (1972) பகு : 206
  4. இராமவதாரம் – (ராஜம் கம்பெனி பதிப்பு) சுந்தரகாண்டம் ஊர் தேடும் படலம் – (பாடல் எண் 110)
  5. திருவிளையாடல் புராணம் – திருமணப்படலம் (பாடல் - 74)