பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

நன்மை கூர் வரிசைத் தூசு
நல்குமென்று ... ..." எனவும்,

பெரும்பற்றப்புலியூரார்

“துய்ய பேரூலஇற் கெல்லாம் துலங்கிய ராவுத்தராயன்” எனவும் பாடுகின்றார்.[1] பதினைந்து நூற்றாண்டு இலக்கியங்களான கலிவெண்பாவிலும், கந்தர் அலங்காரத்திலும் அருணகிரிநாதர் தாம் வழிபடும் முருகவேளை,

“சூர்க்கொன்ற ராவுத்தனே! .... .... ....”
“மாமயிலேறும் ராவுத்தனே! .... .... ....”

என குதிரை ராவுத்தனாகவே கற்பனை செய்து பாடியுள்ளார்.[2] பாரசீகக் குடா நாடுகளான, கிஷ், ஹெர்முஸ், குரோஷான், காத்திப், லஹ்ஸா ஆகிய இடங்களிலிருந்து ஆண்டொன்றுக்கு ஐயாயிரம் முதல் பதினாயிரம் குதிரைகள் பாண்டியப் பேரரசனால் தரவழைக்கப்பட்டன வென்றும் ஒவ்வொரு குதிரைக்கும் இருநூற்று இருபது தினார் (செம்பொன்) வழங்கப்பட்டதென்றும் வரலாற்று ஆசிரியர் வஸ்ஸாப் வரைந்துள்ளார்.[3]

இவைகளில், பாரசீக நாட்டில் இருந்து வரப்பெற்ற குதிரைகள் “பரி” என்றும், துருக்கி நாட்டுக் குதிரைகள் "துரகம்" என்றும், மத்திய ஆசியா கொராஸன் பகுதி குதிரைகள் “கோரம்” என்றும் வழங்கப்பட்டன.[4] இவைகளிலும், சேரமன்னர் குதிரை "பாடலம்" என்றும் சோழனது குதிரை "கோரம்" என்றும் பாண்டியது பரி "கனவட்டம்" என்றும் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன. "கோரத்துக் கொப்போ கனவட்டம் அம்மானை ...” என்பது கவியரசர் ஒட்டக்கத்தர்


  1. பரஞ்சோதி முனிவர் - திருவிளையாடற் புராணம்.
    பெரும்பற்றப் புலியவர் நம்பி - திருவாலவுடையார்
    திருவிளையாடல் புராணம் (நரிகுதிரையான படலம்)
    பாடல் எண் : 83.
  2. அருணகிரி நாதர் - கந்தர் அலங்காரம்
  3. Elliott and Dowson - History of India (vol. III)
  4. Sethu Pillai R.P. - Words and their Signifigance p. 22