பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

வாக்கு.[1] குதிரையைக் குறிக்கும் “பரி” என்ற சொல்லும் FAR என்ற பாரசீகச் சொல்தான். இந்த திசை சொற்களை ஒட்டி குதிரை சம்பந்தமான சேணம் (Cenam), லகான் (Lakan) சவுக்கு (Cavukka) சவாரி (Safary) என்ற பாரசீக சொற்கள் தமிழில் கலந்து தமிழாகவே வழக்கில் உள்ளன. இன்னும் கடிவாளம், மொக்கனி என்பன இத்தகு தொடர்புடைய தமிழ் வழக்காகும்.

அரபு நாட்டுக்குதிரைகளும் அரபியரும் பெரும் மரக்கலங்களில் நமது கடற்கரைக்கு வந்து சேரும் நிகழ்ச்சியை வண்ண ஒவியமாக திருப்புடை மருதூர் கோபுரதளத்தில் தீட்டப்பட்டுள்ளது.[2] அந்த ஒவியத்தை உற்று நோக்கியபின் இந்தப்பாடலைப் படித்துப்பாருங்கள்’’.

          “இருங்கழிச் செறுலின் தீம்புளி வெள்ளுப்பு
          பரந்தோங்கு வரைப்பின் வன்னகத் திமிலர்
          கொழுமீன் குறைகிய துடிக்கட் ருணியல்
          விழுமிய நாவாய் பெருநீரோச் சுநர்
          நனந்தலை தேஎத்து நன்கல னுய்ம்மார்
          புணர்ந்துடன் கொணர்ந்த புரவி யோடனைத்தும்...”

— மதுரை காஞ்சி 8–16:26

இதனை ஒருமுறை மீண்டும் படித்து விட்டு ஓவியத்தை உற்று நோக்குங்கள், இந்தப் பாடலை அப்படியே தூரிகையால் திட்டப்பட்டுள்ளது போன்று தெரியவரும். இந்த ஓவியம் பதினாம்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இந்தக் குதிரை வணிகம் இரு நாடுகளின் உறவு நிலையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியதுடன், தமிழகத்தில் பல்லாயிரம் அராபிய இல்லாமியர் வந்து தங்குவதற்கான பொன்னான வாய்ப்பும் வாழ்க்கை நிலையையும் உதவின. தமிழ் மண்ணில் வந்து இறங்கிய அரபிக் குதிரைகளைப் பழக்கி, தமிழ்நாட்டு முறையில் பயிற்சி அளித்து வரவும், அவைகளுக்கு ஏற்ற உணவு வகைகளை கொடுத்துப் பராமரிக்கவும், வைத்திய உதவி வழங்கவும், அரபிகளது பணி தேவைப்பட்டது. குதிரை வளர்ப்பில் பழக்கமும் திறமையும் மிக்கவர்கள் அன்றைய தமிழகத்தில் அரிதாக இருந்தனர்.[3] பதினைந்தாம் நூற்றாண்டு


  1. ஒட்டக் கூத்தர்-தனிப்பாடல் இரட்டு
  2. Hariharan S. South Indian Studies vol II p. 173 – 174.
  3. Nilakanta Sastri K. A–Foreign Notices of s. India – p. 173