பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

பெரும்பாலும், கிழக்கு கடற்கரையோரப் பட்டினங்களான நாகபட்டினம், அதிராம்படடினம், பாசிப்பட்டினம், தொண்டி, தேவி பட்டினம், பாம்பன் இராமேஸ்வரம், வேதாளை, பெரியபட்டினம், கீழக்கரை, தூத்துக்குடி. காயல்பட்டினம், ஆகிய ஊர்களில் உள்ள இஸ்லாமியர் இந்த தொழில்களில் அண்மைக்காலம் வரை ஈடுபட்டு இருந்தனர். இவர்கள், தோணி, டிங்கி, சாம்பான் என்ற வகையான மரக்கலங்களைத் தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தினர். அவர்கள் மரைக்காயர், (மரக்கலராயர்) எனவும் வழங்கப்பட்டனர். மரக்கலம் என்ற பொருளைத் தருகிற "மர்க்கப்” என்ற அரபுச் சொல்லின் தமிழ் ஆக்கமே மரைக்கார் என்பது பேராசிரியர் முகம்மது ஹூஸைன் நயினார் அவர்களது முடிவு. தமிழக இஸ்லாமியரின் ஒரு பிரிவினரை, - தங்களுக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி கடல் வணிகத்தில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியரைக்-குறிக்க பயன்படுத்தப்பட்ட தமிழ்ச் சொல்லே' மரைக்காயர் என்பது. மரக்கலராயர் என்ற நல்ல தமிழின் திரிபு தான் மரைக்கார் அல்லது மரைக்காயர். குதிரைப் படையின் தளபதியைக் குறிக்க வழங்கிய ராகுத்தராயன் என்ற சொல் ராவுத் தன் எனத் திரிந்தாற் போல மரக்கலங்களின் தலைவன் என்ற பெயரில் மரக்கலராயர் என புனையப்பட்டுள்ள பிற்காலத் தமிழ்ச் சொல் இங்ங்னம் திரிபு பெற்றுள்ளது.[1] இதனைப் போன்று மரக்கலம் சம்பந்தப்பட்ட இஸ்லாமியரைக் குறிக்க “ஓடாளி” (ஓடாவி) என்ற பெயரும் உள்ளது, ஆனால் இந்தச் சொல் கீழக்கரை, தொண்டி போன்ற பழமையான கடற்கரை ஊர்களில் “ஓடாளி” (ஓடாவி) என வழக்கு பெற்றுள்ளது. ஓடத்தை ஆள்பவன் என்ற பொருளில்.

அண்மை நாடான இலங்கையில், இஸ்லாமியர்களை சிங்கள மொழியில் மரக்கல மினிசு’’ என்றே வழங்குகின்றனர்.[2]மரக்கலத்தில் வந்த (வணிக) மக்கள் என்னும் பொருளில், தமிழ்ப் பதமான மரக்கலம், சிங்களத்திலும் திசைச் சொல்லாக வழங்குகிறது. "கட்டுமரம்" என்ற தனித்தமிழ்ச் சொல், ஆங்கில மொழியில் “கட்டமரான்” என்றால் போல, இத்தகைய வணிகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மரக்கலத்திற்கு ஒரு வகையான இறை விதிக்கப்பட்டது. செக்கிறை, தறிஇறை, போன்று


  1. இதே சொல் அண்டை நாடுகளான இலங்கையிலும், கேரளத்திலும் சில பகுதிகளில் உள்ள இஸ்லாமியரைக் குறிக்கும் இனப்பெயராகவும் வழங்கப்பட்டு வருகின்றது.
  2. பிறையன்பன் - கலையும் பண்பாடும் (1962) பக். 58,