பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


7

லெப்பை


இங்ஙனம், தமிழ்ச் சமுதாயத்தினரான இஸ்லாமியர் நாளடைவில் துருக்கர், சோனகர், ராவுத்தர், மரைக்காயர் என்று பிரிவினைப் பெயர்களால் பிற்காலங்களில், லெப்பை, நயினார், தரகளுர்முதலியார் அம்பலம், சேர்வை என்ற பெயர் விகுதிகளை இணைத்துக் கொண்டனர். அவர்கள் வாழ்ந்த அந்தந்தப் பகுதியில் உள்ள இதர பிரிவினர்களின் பெயராலே இவர்களது அந்தப் பெயர் விகுதிகளும் அமைந்தன. லெப்பை குடிக்காடு (திருச்சி மாவட்டம்) நயினார் கோவில், நயினார் பேட்டை. (முகவை மாவட்டம்) நயினார்புரம் (பசும்பொன் மாவட்டம்) நயினார் அகரம் (நெல்லை மாவட்டம்) என்று அவர்களது ஊர்ப் பெயர்களும் அந்த மக்களது விகுதிப்பெயருடன் வழங்கப்படுகிறது ஈண்டு குறிப்பிடத்தக்கனவாகும். "லெப்பை" என்ற சொல் தமிழகமனைத்தும் பரந்து வாழும் எல்லாப் பகுதியிலும் உள்ள இஸ்லாமியரைக் குறிப்பிடும் பொதுச் சொல்லாக உள்ளது. அரபுத் தாயகத்தில் இருந்து வந்து நாளடைவில் தமிழ் முஸ்லிம்களாக மாறிய பொழுதும், அவர்களது தலையாய கடமை திருமறையை ஓதியும், பிறருக்கு ஓதுவித்து உணர்த்தும் பணியாக இருந்தது. என்றாலும், இவர்களது வாழ்க்கை நிலை, நெசவாளியாக, விவசாயியாக, கடல் தொழிலாளியாக இருந்து வந்தது. ஆனால், இவர்கள் பதினேழு, பதினெட்டாவது நூற்றாண்டுவரை லெப்பைகள் என்ற பொதுப் பெயரிலேயே வழங்கப்பட்டனர். யாக்கோபு சித்தரது பாடல் ஒன்றில் “சொல்


முகமது ஹீசேன் நயினார். Dr – வள்ளல் சீதக்காதி (1953) தனிப்பாடல் இணைப்பு பக். 45, 47