பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


11

இஸ்லாமிய அமைச்சர்கள்


அரபு நாட்டுக் குதிரைகள் பத்திரமாகக் கொண்டுவரப்பட்டு பாண்டிய நாட்டின் அன்றைய துறைமுகங்களான கபில் (காயல்) பத்தன் (பெரியபட்டினம்) மாலிபத்தன் (தேவிபட்டினம்) ஆகிய கடற்துறைகளில் கரை இறக்கப்பட்டன. இதனைக் கண்காணிப்பதற்கான அமைச்சு ஒன்று இயங்கி வந்தது.[1] இந்த வணிகத்தில் பெரிதும் ஈடுபட்டிருந்த கிஸ்நாட்டு அதிபதியான ஜமால்தீன் என்பவர் மாறவர்மன் குலசேகரன் பாண்டியரது பெருமதிப்பிற்குரியவராக விளங்கினார். இவர் தமது ஒன்று விட்ட தமையனாரன ஜக்கியுதீனை வணிகத்துறை அமைச்சராக பணி புரியும்படி ஏற்பாடு செய்தார். இவர்களது குடும்பத்தினரும், கிளையினரும், பாண்டிய நாட்டு அரசியலில் தொடர்ந்து பல்லாண்டு காலமாகப் பெரும் பங்கு பெற்று இருந்தனர். மூவாயிரம் மைல் தொலைவில் உள்ள வளைகுடா நாட்டில் இருந்து தமிழகம் வந்த இஸ்லாமியர், தமிழ்ச் சமுதாயத்தில்-அரசியல், நிர்வாகத்தில், எத்தகைய சிறந்த, உயர்ந்த, நம்பிக்கைக்குரிய பொறுப்புக்களுக்கு உரியவர்களாக உயர்த்தப் பட்டிருந்தனர் என்பதை வரலாற்று ஆசிரியர் வஸ்ஸாப், ரஷீத்தின் ஆகியோர்களது குறிப்புக்களைப் படிக்கும் பொழுது வியப்புத்தான் விஞ்சி நிற்கிறது.

சுல்தான் ஐக்கியத்தின் அப்துல் ரகுமான் என்ற மதினத்து பிரமுகர் பாண்டியனது பிரதான அமைச்சராக விளங்கினார்.


  1. Krishnasamy Ayyangar. Dr. S.—South India and her Moham madan Invaders (1921) P.P. 70-71.