பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

டியனும் "கதிரவனைக் கண்ட தாமரை போல மகிழ்ச்சி அடைந்ததாக" இலங்கை வரலாறான மகாவம்சம் விவரித்துள்ளது. அத்துடன், சுல்தான் ஜமால்தீனை ஆரிய சக்கரவர்த்தி எனவும் தமிழர்களில் தலைசிறந்தவர் என்றும் அந்நூலில் குறித்துள்ளது.[1]

“ஆரியச் சக்கரவர்த்தி” என்று விருது, அந்த கால கட்ட அரசியலில், தளபதிகளுக்கு வழங்கப்பட்டதொரு சிறப்புப் பட்டமாகும். இதனை, 13 வது, 14வது நூற்றாண்டைச் சேர்ந்த திருப்புல்லானி திருக்கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.[2] சுல்தான் ஜமால்கீனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டிருந்தது என்பது தெளிவாகிறது.[3] கல்வெட்டு ஒன்றில் பாரசீக மன்னர் ஷாவிற்கு "ஆசியா" என்ற பட்டம் இருந்தது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. பாண்டியப் பேரரசர் குலசேகரரிடமிருந்து இந்த ஆரியச் சக்கரவர்த்தி, ஆனையொன்றைப் பெற்றது விவரிக்கப்பட்டுள்ளது. இன்னொரு இலங்கை வரலாற்று நூல் இந்த ஆரியச் சக்கரவர்த்தி, பாண்டிய நாட்டில் இராமேசுவரத்தை அடுத்த பகுதியை ஆண்ட குறுநில மன்னர் எனவும் பெரிதுபடுத்திக் குறித்துள்ளது.[4] வணிகத்தின் மூலம் எய்திய செல்வத்தைத் தவிர்த்து கீழ்க்கோடி நாடான சீனத்தினின்றும். இந்துஸ்தானத்தின் வடபகுதிகளிலிருந்தும், மாபார் என வழங்கப்பட்ட தென் தமிழகத்தின் தேவைக்கு எந்தவிதமான பொருட்கள் இறக்குமதி செய்யப்படல் வேண்டும் என்பதற்கான கட்டளைகளை சுல்தான் ஜமால் தீன் வழங்கி வந்தார். தரவழைக்கப்பட்ட பொருட்களை அவரது முகவர்கள் முதலில் தேர்வு செய்த பிறகு எஞ்சியவற்றை மற்றவர்கள் விலைக்கு வாங்க இயலும் அவ்விதம் தேர்வு பெற்ற பொருட்களை அவரது கப்பல்களில் அல்லது பிறரது வாணிபக்கலங்களின் மூலம் மேற்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இதனைப் போன்றே மாபாரின்


  1. Nicholos and Paranavitana-Concise History of ceylon(1960)
  2. A. R 11 O. 113/1903
  3. Srinivasa Ayangar Dr.S-South India and har Mohammadan Invaders (1921) P.57.
  4. Nicholos and Paranaviathana - Concise History of ceylon (1961) p. 289.