பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

பண்டங்களும் மாலிக்-குல்-இஸ்லாமினால் தேர்வு செய்யப்பட்டு எஞ்சியவை கிழக்கு, மேற்கு நாடுகளுக்கான கப்பல்களில் ஏற்றுமதி செய்யப்பட்டன. அவைகளின் மூலம் சம்பாதிக்கப்பட்ட செலாவணியைக் கொண்டு உள்நாட்டுச் சந்தைக்குத் தேவையான பொருட்கள் அந்த நாடுகளில் வாங்கப்பட்டன. உலகின் கடைக்கோடி நாடான சீனத்தின் பொருட்கள் மேற்கு கோடி மூலையில் உள்ள நாடுகளில் பாவிக்கப்பட்டன. இத்தகைய முறையான தொடர் வாணிகம் அதுவரை யாராலும் திறம்பட மேற்கொள்ளப்பட வில்லையென வஸ்ஸாப் வரைந்துள்ளார்.[1] கிழக்கும், மேற்கும் கொண்டிருந்த இத்தகைய உலகம் அளாவிய கடல் வணிகத்திற்கு வித்திட்டவர்கள் இந்த தமிழ்நாட்டு அரபு முஸ்லிம்கள் என்பதை யாரும் மறுக்க முடியாததாகும். அவர்களின் வழித்தோன்றல்கள் இந்த வாணிக முறையை பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கப்பகுதி வரை மேனாட்டாரும் வியக்கும். வண்ணம் காயல், கீழக்கரை, தொண்டி, தேவிபட்டி னம், நாகப்பட்டினம் ஆகிய துறைகளில் தொடர்ந்து ஒழுகி வந்தனர். இவர்களில் சிறந்து விளங்கிய செம்மல்களான சீதக்காதி மரைக்காயர், அப்துல் காதிர் மரைக்காயர் ஹபீப் மரைக் காயர் பற்றிய வாணிப வளம், வள்ளண்மை, வாழ்க்கை ஆகியவை, வரலாற்று இதழ்களில் வாடாத மலர்களாக இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் சீனத்தில் சிறப்புடன் ஆட்சிபுரிந்த பேரரசர் குப்ளாய்கானது அரசவைக்கு அரசியல் தூதுவராக செல்ல வேண்டிய சூழ்நிலை சுல்தான் ஜமாலுத்தீனுக்கு ஏற்பட்டது. அன்புடைமை, ஆன்ற குடிப்பெருமை, வேந்தன் விரும்பும் பண்புடைமை, ஆகிய துதுக்குரிய இலக்கணம் அனைத்தும் அவரிடம் அமைந்து இருந்ததை நன்கு உணர்ந்த பாண்டியன் மாறவர்மன் குலசேகரன், இந்த வணிகப் பெருமகனை நகச்சொல்லி நன்றி பயக்கும் தூதாகக் கொண்டதில் வியப்பில்லை. கி.பி. 1279 ல் சீனம் சென்ற இவர் பேரரசர் குப்ளாய்கானது விருந்தோம்பலில் திளைத்தவராக பத்துமாதங்கள் தங்கிவிட்டு காயல் திரும்பினார். தொடர்ந்து அவரும் அவரது மக்களும் இந்தப் பணியில் பாண்டி


  1. Nilakanta sastri K.A. – Foreign Notices of South India (1952)p. 189.