பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

னத்தில் இரண்டரை சதவீத மதிப்புத் தொகையை ஆண்டிற்கு ஒருமுறை வழங்குவதற்குப் பதிலாக ஒவ்வொரு மாதமும் வழங்கிவந்தார் என பாரசீக காப்பியமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1] சிறப்பான வகையில் செல்வமும் செல்வாக்கும் பெற்று இருந்தும், சமயத்தைப் பேணுவதிலும், அன்றறிவாம் எண்ணாது அறஞ் செய்யும்" ஆற்றலும் பெற்று இருந்த அவரது அரிய பண்பினை யாரும் பாராட்டாமல் இருக்க முடியாது. அதனை அடுத்து சகோதர சண்டைகளினால், பாண்டியப் பேரரசு பலவீனமடைந்தது. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியலில் ஏற்பட்டிருந்த இஸ்லாமியரது நெருக்கமும், பிடிப்பும் தளர்ந்தது. தில்லிப் பேரரசின் தலையீடு அதனை உறுதிப்படுத்தியது.


  1. Futuhus Salatin of Isami - (English Trans) vol II Aligarh 1977 verses, 7037-39