பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

யது. தமிழ்நாடு அடுக்களைகளில் சமைக்கப்படும் இறைச்சியின் மனம் எங்கும் பரந்து வீசியது. முந்தைய பாண்டியர்களுக்கு அகத்திய முனிவரால் வழங்கப்பட்ட வீரவாள் மூலையில் கிடந்தது. அதனை சுமங்கலியான பெண் ஒருத்தி கம்பனனிடம் கொடுத்து துலுக்கர்களை வெற்றி கொள்ளுமாறு வேண்டினாள்". . . . . . இங்கனம் தொடர்கிறது அந்த கற்பனைக்காவியம்! கணவனைப் புகழ்ந்து பாடும் மனைவியின் பாடல்கள் வேறு எப்படி இருக்கும்? இசுலாமியர்களுக்கு எதிராக இதைவிட மோசமான கற்பனையை அந்த அம்மையார் செய்ய இயலாது! இது ஒருதலைப்பட்சமான மிகைப்படுத்தப்பட்ட வர்ணனை இதனை உறுதி செய்யும் வேறு ஆதாரம் எதுவும் கிடைக்க வில்லையென்றாலும், மதுரை மீதான குமார கம்பனனது மின்னல் தாக்குதல் கற்பனையல்ல. இந்த தாக்குதலுக்கு இருபது ஆண்டுகளுக்குப் பிறகும், மதுரை சுல்தான்களது ஆட்சி தொடர்ந்ததை வரலாற்றுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் மதுரையிலும், பெரிய பட்டினத்திலும், கிடைத்த மதுரை சுல்தான்களது காசுகள் அவர்களது ஆட்சிக்கால வரம்பை தெளிவாக தெரிவிப்பனவாக உள்ளன.[1]தொடர்ந்து குமார கம்பனது வெற்றி தென்னகத்திலும் விஜயநகரப் பேரரசு உருவாகும் ஒரு புதிய திருப்பத்தின் முன்னறிவிப்பாக அமைந்தது.

பாமர மக்களின் மத உணர்வுகளை கூர்மைப்படுத்தி அந்நியர்களாக, தமது மத விரோதிகளாக, மதுரை சுல்தான்களைத் தமிழ் மக்களிடம் அறிமுகப்படுத்தி, அவர்களைத் தனிமைப்படுத்தி. முடிவில் அவர்களது அரசை கி.பி. 1378 ல் கம்பணன் அகற்றினான். ஆனால், தலைமுறை தலைமுறையாக தென்னகத்தை ஆண்ட பாண்டிய மன்னர்களது. தமிழ்வேந்தர்களது வழித் தோன்றல்களிடம் இந்த மன்னர்களிடம் அவர்கள் இழந்த ஆட்சியை மீண்டும் கொடுக்கவில்லை. மாறாக தமிழ் மண்ணில் வடுகரது பாளையப்பட்டு ஆட்சியும், தல, தேச, திசை காவல் முறைகளும் அவர்களது கலாச்சாரமும், ஆந்திர நாட்டிற்கு தெற்கே தமிழகம் முழுவதும் அரசியல் மூலமாக பரவுவதற்கு வழி வகுத்தன. வெகு தொலைவில் உள்ள தில்லியுடன் இணைக்கப்பட்டிருந்ததற்க்குப் பதிலாக அதைவிட குறைவான தொலைவில் உள்ள


  1. கமால் எஸ்.எம் தமிழ்நாட்டு வரலாற்றுக் கருத்தரங்கு(1979) பக் 312