பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84



விஜயநகரத்துடன் மதுரை இணைக்கப்பட்டது. இசுலாமிய ஆள வந்தார்களுக்குப் பதில் வடுகர், தொடக்கத்தில் விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சியிலும், அடுத்து, அவர்களது ஆளுநர்களால் துவக்கப்பட்ட மதுரை, மைசூர், தஞ்சை, செஞ்சி நாயக்கர்களது பரம்பரை ஆட்சியிலும் ஏறக்குறைய முன்னுாறு ஆண்டுகள் தமிழகம் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டது.

இவர்களது ஆட்சியின் விளைவு என்ன என்பதைப் பற்றிய பலதிறப்பட்ட கருத்துக்கள், வரலாற்று ஆசிரியர்களால் வெளியிடப்பட்டுள்ளன. அவைகளில்,

"அந்த அரசின் செல்வமும் சிந்தனையும் ஆலயங்களாகவும் சிற்பங்களாகவும் வெளிப்படுத்தப்பட்டன. அத்த அரசு தனது முழுவளத்தையும் மக்களுக்குச் செலவிடச் சித்தமாக இருந்ததை அப்பொழுது நிறைவு செய்யப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களின் எண்ணிக்கையையும் இயல்பையும் கொண்டும், மனநிறைவு பெற்று மலர்ச்சியடைந்த மக்களைக் கொண்டும் உணரலாம்.” என்பது திருநெல்வேலி மாவட்ட மானுவல் நாலாசிரியர் ஏ.ஜே.ஸ்டுவர்ட்டின் கணிப்பு ஆகும்.[1] ஆனால் அவருக்கு காலத்தால் முற்பட்ட மதுரைச் சீமை வரலாற்று ஆசிரியர் நெல்சனோ

"நாயக்கர் ஆட்சியின் முடிவு மதுரைக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகும். காரணம் அந்த ஆட்சி எல்லாவிதமான முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தததுடன், பல திறப்பட்ட மக்களது - செல்வந்தர், ஏழை - உயர்ந்தவர் தாழ்ந் தவர் - ஆகிய அனைவருக்கும் உண்மையான மகிழ்ச்சியைத் தந்தது" என மிகவும் தெளிவாக தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.[2] நெல்லை மாவட்ட வரலாற்று ஆசிரியரான புனித தந்தை கால்ட்வெல்,

"மேலைநாட்டு நாகரிக முறைப்படி, அல்லது, நல்லது கெட்டிது என முடிவு செய்யப்படும் முறை அல்லது இந்து இசுலாமிய நெறிமுறைகளின் அடிப்படையில் ஆய்வு செய்தால் கூட நாயக்க மன்னர்கள், தங்களது கடமையில் இருந்து நழுவி


  1. Stuart A.J. — Tinnevely Manual (1928)
  2. Alexander Nelsonn-Manual of Madura Country (1868)