பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

வளர்ந்து போர்த்திருந்தது. மேற்கே நின்ற மலைகள் மண் மலைகள்; வடக்கில் ஓங்கிய மலைதான் கல்

மலை; அந்த மலையே உயரமான மலையுமாகும்.

அந்த மலையின் அழகுக்கு அழகு செய்வனபோல் அதில் இரண்டு குவடுகள் இருந்தன. ஒன்று தட்டை யாய் அமர்ந்திருந்தது: ம ற் .ெ ற | ன் று குவிந்து ஓங்கியிருந்தது. இந்த இரண்டுக்கும் ஊரார் சட்டக் கல் கூர்ச்சுமலை என்றும் வழங்கும் பெயர்கள் மிகச் பொருத்தமாக இருப்பது அறிந்து மகிழ்ந்தேன். மலை யின் தோற்றத்தைச் சங்கப் புலவர் ஒருவர் கண்டால், அதன் குவடுகள் இரண்டையும் இரண்டு கைகளாகப் புனைந்து பாடியிருப்பார். இந்த மலையைச் சங்கப் புலவர் ஒருவரோ பலரோ அந்தக் காலத்தில் பார்த் திருக்கக் கூடும்; பாடல்களும் பாடியிருக்கக் கூடும்” ஆனால், அந்தப் பாடல்கள் காலவெள்ளத்தை நீந்திக் கரையேற முடியாமல் அடித்துக் கொண்டு போகப் பட்டிருக்கலாம். யார் கண்டார்கள்? காலவெள்ளம் எத்தனையோ நூல்களை அடித்துக் கொண்டு ஓடுவதை இருபதாம் நூற்றாண்டிலும் நாம் கண்ணாரக் காண்கிறோமே! இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன் அச்சுப் பொறியும் மற்றக் கருவிகளும் இல்லாத பழங்காலத்தில் அந்த .ெ வ ள்ள த் தி ல் அழிந்தவை எவ்வளவோ? பாடல்கள் போனாலும், மலை போகவில்லை; நிற்கிறது; ஓங்கி நிற்கின்றது: ஒரு கையை வானுறச் சுட்டிக்கொண்டு அந்த மலை இன்னும் இறுமாந்து நிற்கின்றது.

“நான் விரும்பிக் குளித்து வந்த மற்றோர் இடம் ஊர்க்கு வடக்கே மலையடிவாரத்தில் உள்ள பெரிய ஓடை என்னும் அருவியாகும். கலசல. என்ற ஒலி