பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு : 1

டாக்டர். மு. வ. குறித்துச் சான்றோர் பாராட்டு

I

“வாலாஜா, இராணிப்பேட்டை, வேலூர், வெட்டு வாணம் முதலிய இடங்கட்கு யான் அடிக்கடி செல்வேன். கூட்டங்களில் யான் மு. வரதராஜனாரைப் பார்ப்பேன். அவர் எண்னைக் கண்டதும் ஒதுங்கி ஒதுங்கி நிற்பர். பின்னே நாங்கள் நெருங்கிப் பழகினோம். வரதராஜனார் முக அமைப்பு என் மூளைக்கு வேலை அளித்தது. அதைச் சிந்திக்கச் சிந்திக்க என் மூளை அவர் மூளையை நண்ணியது. நுண்ணறிவுக்கேற்ற முகம் வடிந்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்தேன்.

“முதல் முதல் வரதராஜனார் பேச்சை யான் வெட்டு வாணத்தில் கேட்டேன்; அப் பேச்சு அவர் முக அமைப் பைப் பற்றி யான் கொண்ட முடிவை உறுதிப்படுத்தியது. அவரது எழுத்தும் பேச்சைப் போலவே இருத்தல் கண்டேன்.

“வரதராஜனார் பேச்சிலும் எழுத்திலும் பர்னார்ட் ஷாவின் கருத்துக்கள் ஆங்காங்கே பொதுளும். அவர் பர்னார்ட்ஷா நூல்களைப் படித்துப்படித்து ஒரு தமிழ் பர்னார்ட்ஷா ஆனார் என்று கூறுதல் மிகையாகாது.