பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

அவரை எனது சீர்திருத்த உலகில் என் உள்ளம் சேர்த்தே இருக்கிறது.

“வரதராஜனார் என் வீட்டுக்கு வருவர்; எனக்கினிய கனிகளைக் கொணர்வர். அவர் என்னிடம் பேசிக் கொண்டே எனது அனறாட வாழ்க்கையை ஆய்ந்துள் ளனர். அஃது எனது மணி விழாவை முன்னிட்டு வள்ளுவர் குறட்டார் வெளியிட்ட மலரில் வரதராஜனார் வரைந் துள்ள ஒரு கட்டுரையால் தெரிகிறது.

“அறிஞர் இப்பொழுது பச்சையப்பன் கல் லூரியில் தமிழ்ப் பேராசிரியராக வி ற்றிருக்கிறார். அவர் பத்திரிகை யுலகிலும் ஓர் ஆசிரியராதல் வேண்டும் என்பது எனது வேணவா. ஆண்டவன் அருள் செய்வானாக.”

“வரதராஜனாரிடம் தமிழ் பயிலும் மாணாக்கர் சிலர் என்னிடம் வருவர். அவருள் குறிக்கத்தக்கவர் வேங்கட சாமி, இரகுநாயகன், குருசாமி முதலியோர். (மற்றவர் பெயர்கள் தெரியவில்லை.) இவர்கள் தொண்டால் வருங் காலத் தமிழ்நாடு நன்கு அமையும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டாகியிருக்கிறது.’

-தமிழ்த் தென்றல் திரு. வி. க. திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புகள் : பக்கங்கள் 660-662;