பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர்.சி.பா. 101

II

பண்டிதர்களாகவோ. அறிஞர்களாகவோ விளங்கிச் சிறப்புற முடியாமல் தோல்வியுற்றவர்களின் பொழுது போக்கிற்குரிய வழியே புதினம் படைக்கும் கலையாகும் என்று பண்டிதர்கள் கருதிய கால கட்டம் ஒன்றிருந்தது அக்கால கட்டத்தில் இன்று சென்னைப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக இருக்கும் மு. வரதராசன் நாவல் களைப் படைக்கத் தொடங்கினார். அவர் புதினங்களைப் படைக்கும் கலைக்கு, மதிப்பையும் மரியாதையையும் பண்டிதர் உலகிலும் தேடித் தந்துள்ளார். பெருவாரியான நாவலாசிரியர்களுடைய நடை போலில்லாமல் அவருடைய நடை எளிமையாகவும் ஏற்றமிக்கதாகவும் இருந்தது. அவருடைய நாவல்கள் வெற்றிகரமான நாவல்களாகவும், பிரபலமான நாவல்களாகவும் அமைந்தன”.

(Dr. M. Varadarajan, the Professor of Tamil in the Madras university has glven dignity and respectability to novel writing even in the world of pandits who thought of this art as the hobby of those who failed to become pandits or scholars. His style is both simple and elegant unlike the style of a majority of other novelists His novels are, successful and popular- Prof T P Meenakshisundaran, A History of Tamt| Literature pp., 182-183)

-டாக்டர் மா. எழில் முதல்வன்மொழிபெயர்ப்பு