பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fog டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

III

பெருவாரியான நாவலாசிரியர்களுடைய நடை போலில்லாமல் பேராசிரியர் மு. வரதராசனார் புதுமைப் பாங்குக் காலத்துத் தலைசிறந்த தமிழ் உரைநடை ஆசிரியர்களுள் முதன்மை இடத்தைப் பெறும் தகுதியைப் பெற்றுள்ளார். அவருடைய படைப்புகள் பலதரபட்டன. புதினமாக இருந்தாலும், நாடகமாக இருந்தாலும், கட்டுரையாக இருந்தாலும், மொழியியல் நூலாக இருந் தாலும் சிறுவர்களுக்குரிய பேச்சுரையாக இருந்தாலும், வாழ்க்கை வரலாறாக இருந்தாலும்....... .. அனைத்திலும் ஒரே வகையான வீறமைதியும், தெளிவும், சமநிலை அமைதியும் பகட்டு ஆரவாரயின்மையும் பேராசிரியர் மு. வரதராசனாருடைய உரைநடையின் சிறப்பு இயல் புகளாக அமைந்துள்ளன,

(டாக்டர் ஆர்.இ. ஆஷெர்; தமிழ் உரை நடை வரலாற்றில் சில முடிமணிகள்; ப:47.)

IV

“பேராசிரியர், டாக்டர் மு. வரதராஜன் அவர்கள் இளமைமுதலே கல்வியில் கருத்துான்றி,தமிழில் தோய்ந்து, ஆங்கிலத்தில் தோய்ந்து, இலக்கியங்களில் திளைத்து, அறநெறி ஒர்ந்து, சிந்தனையில் சிறந்து, உலகினை (மனித வாழ்வை)த் தெளிந்து, சமுதாயத்தை வாழ்விக்கும் நோக்குடன் மனிதனின் உரிமையைப் போற்றிக் கடமையை உணர்த்தும் ஆர்வத்துடன் பயன் மிகுந்த புதினங் (காதை)கள் பலவற்றைப் படைத்துள்ளார்.