பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி. பா. 103

“பண்பின் திருவுருவாய், அறிவுச் செம்மலாய் முற்போக்காளராய், இலக்கிய மேதையாய், தேர்ந்த திறனாய்வாளராய், புதினப் படைப்பாளராய் விளங்கிய மு.வ. அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தன்னிகரற்ற தொண்டாற்றிய பெருமைக் குரியவர். - -

“மக்களிடையே தமிழார்வம் தழைத்திடத் தமது பணியால், உரையால், உரைநடையால் வழி கண்டவர். அவர் அவருடைய ப ைட ப் பு இலக்கியங்கள் மூலம், இலக்கியம் பயிலும் ஆர்வம் துலங்கியது; தமிழ் வழிச் சிந்தனை மேம்பட்டது. உரைநடை புதுப்பொலிவு பெற்றது. தமிழர்தம் அறிவு நிலையும் முற்போக்கு

உணர்வும் சிறந்தது. இது குறித்து இருவேறு கருத்துக்கு இடமில்லை.

‘மு.வ. இயற்றிய புதினங்கள் யாவும் படிப்பவரின் சிந்தனையைத் துாண்டி, கருத்து விளக்கம் செய்து, வாழ்வைத் தெளிந்திடத் துணைபுரிகின்றன.

“மு. வ. வின் நடை ஒரு நீரோடை. அதன் பளிங்கு நீர் போன்ற அவரது சொல்-தொடர்-நடை-அதன் ஆழத்தில் கிடக்கும் சிறு கற்களையும் மணிகளையும், புல்லையும் பூண்டையும் துலங்கக் காட்டும் வகையில் அமைந்தது, அதனைப் படிப்போர் படிக்கும்போதே எவ்வித முயற்சியுமின்றி அதில் ஆழ்ந்து காணலாகும் நுண்பொருளை எளிதில் கண்டு கொள்ளலாம்.”

(பேராசிரியர் க. அன்பழகன்; க. த. திருநாவுக்கரசின் பேராசிரியர் மு.வ. வரதராசனாரின் படைப்பிலக்கியம், அணிந்துரை : V VI VII)