பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். மு. வ. அவர்களின சிந்தனைகள் சில :

  • மனம் ஒரே இடத்தில் வேரூன்றி வளர்ந்து செழித் திடும் மரம்போல் ஒரு நெறியைப் பற்றி உறுதியாக நின்றால் நல்லதுதான். அல்லது எங்கெங்குச் சென்றாலும் மாலையில் குறித்த இடத்திற்கு வந்து சேர்ந்திடும் மாடு போல் எத்தொழிலைச் செய்தாலும் குறிக்கோளை மறக்காத மனமாக இருந்தாலும் நல்லதுதான். ஆனால் இன்ன திசை இன்ன போக்கு இன்ன கூடு என்று வரையறை இல்லாமல் இயன்ற வரையில் பறந்து அலையும் பறவையாக இருந்தால் பயன் என்ன ?

(நெஞ்சில் ஒரு முள் : பக். 6)

  • நம் வாழ்க்கை இந்த உலகத்தை நோக்கக் கடலில் ஒரு துளி போன்றது. இந்தச் சிறு வாழ்க்கையில் எல்லா வற்றையும் அறிய முடியாது. எண்ணியவற்றை யெல்லாம் செய்யவும் முடியாது. வாய்ப்பும் குறைவு, வாழ்நாளும் குறைவு, ஆகையால் நம் பங்கு மிகமிகச் சிறியது, வாழ்க்கையில் எல்லாம் பெற முடியாது. எல்லாம் அறிய முடியாது. எவ்வளவோ பெறாமல் அமைதி அடைய வேண்டும். எவ்வளவோ அறியாமல்

அமைதி அடையவேண்டும்.

(அல்லி : பக். 113)

  • குறை இல்லாதவர்கள் உலக்த்தில் இல்லை, குறை களுக்கு இடையே குணத்தைக் கண்டு வாழவேண்டும்,