பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

முள்ளுக்கு இடையே. முரட்டு இலைகளுக்கு

இடையே மெல்லிய மலரைக் கண்டு தேனைத் தேடு

கிறது தேனி! அதுதான் வாழ வழி.

(மண்குடிசை: பக். 95)

நம்மைச் சுற்றிலும் ஏழைகள் உணவுக்கும் உடைக்கும் வழியில்லாமல் வாழும்போது, நாம் ஆடம்பரத்தைத் தேடுவது பாவம் என்பது என் கொள்கை.

(மண்குடிசை : 52)

உழைப்புக்கும் உண்மைக்கும் தவிர வேறு எதற்கும் மதிப்பு இல்லாமல் போனால் உலகில் குற்றங்கள் குறையும்.

- (மண்குடிசை : 436)

மனிதர் மட்டுமே நெடுநேரம் உட்கார்ந்திருக் கிறார்கள். அதனால்தான் மனிதர்க்கு மட்டும் நோய்கள் பல ஏற்படுகின்றன.

(மண்குடிசை : 93)

சாதி சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள்ள

முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள்.

(தங்கைக்கு : 1.5)

உன் சாதிப் பெண்ணாகப் பார்த்து மணந்துகொள். முதலில் நீ என்ன சாதி என்று எண்ணிப்பார். இப்படித்தான் வாழவேண்டும் என்ற சாதியா? என்று தெரிந்துகொள். பிறகு அதே சாதிப் பெண்ணைத் தேடு. -

(அல்லி : 28)