பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி. LIIT’s 9

யோடு வரும் அந்தக் குளிர்ந்த நீரில் குளித்து, பக்கத்தே ஒர் அத்தி மரத்தின் கீழே உள்ள பாறை மேல் அமர்ந்து நல்ல நூல்களைப் படிப்பது வழக்கம்’ என் வாழ்வில் பலநாள் மனம் அமைதியில் மூழ்கிய இடம் அது. பாடல்களை வாய்விட்டுப் பாடி மகிழ்ந்த இடம் அது.

“மலையில் சில சுனைகள் உண்டு. சுனைகளின் இடையில்-பாறைகளின் சிறு பள்ளங்களில் மஞ்சள் நிறமான துகள் காணப்படும். தேவலோகத்துப் பெண் கள் (அரமகளிர்) வந்து சுனைகளில் குளிக்கும்போது பூசிக் கொள்வதற்காகத் தோய்த்த மஞ்சள் அது’ என்பார்கள். அங்கே வளரும் நுண்ணிய பாசிகள் உலர்ந்தபின் அவ்வாறு மஞ்சள்நிறம் பெறுவது இயற்கை. அதுவே உண்மை என்பதை வளர்ந்த பின் உணர்ந்தேன். முருகன் வேல்பட்ட காரணத்தால் அந்த மலை, வேலம் என்று பெயர் பெற்றது என்பார்கள். ஏழு மைலில் வள்ளிமலை இருப்பதையும்

சுட்டிக் கூறுவார்கள். காட்டில் வேல மரங்கள் இருப்பதை அறிந்தும், இவ்வாறு கற்பனை செய்து மகிழ்ந்தார்கள்.

“மலையின் அந்தப் பக்கத்தில் தாழை ஒடை என்ற ஓடை உண்டு. அங்கே உள்ள தாழைமரங்கள் அழகான காட்சியாக இருக்கும் சங்க இலக்கியங்களில் வரும் இயற்கைக் காட்சிகளையும், காந்தள் முதலான மலர்களின் அழகையும் உவமைச் சிறப்புக்களையும் பாராட்டுவதற்கு இந்த அனுபவம் எனக்குப் பயன் பட்டது.”

மேற்கானும் கட்டுரைப் பகுதியினால் டாக்டர் மு.வ. அவர் களின் இனிய இலக்கியவளத்தை நன்கு காணலாம்,