பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. -- - 109

  • “அன்பு வெல்லவேண்டும்; மானம் தோற்கவேண்டும். அன்புக்காகத் தன்மானத்தை, மதிப்பை, பெருமையை விட்டுக் கொடுக்கத் தயங்குகின்ற பலர் வேறு எந்தத் தியாகமும் செய்யமுடியாது.”
  • குறிப்பிட்ட வயது வந்த பிறகு ஆணும் பெண்ணும் சேர்ந்து படிக்கும் படிப்பே கூடாது. அதனால் பலர் இயற்கையின் போராட்டத்துக்கு எளிதில் இரையாகி வருந்த வேண்டியிருக்கிறது. ஆணின் வாழ்க்கை வெளியே பலரோடு பழகித்திரியும் வாழ்க்கை. பலரோடு பழகுவதால் மனம் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு. ஒழுக்கம் கெடுவ தற்கும் வழி உண்டு. சேற்றில் நடந்து வழுக்குவது போன்ற்து இது, பெண்ணின் வாழ்க்கை குடும்பத்தளவில் பெரும்பாலும் இருந்து, கணவனோடும் மக்களோடும் பழகி அமையும் வாழ்க்கை- மனம் கெடுவதற்கும் வாய்ப்பு இல்லை; ஒழுக்கம் தவறுவதற்கும் வழி இல்லை. மணவில் நடப்பது போன்றது. இது. ஆகையால் தவறி விழவே கூடாது. விழுந்தால் நொண்டியாக இருக்க வேண்டும் அல்லது நோயாளியாக இருக்கவேண்டும்.”

• உலகத்துக்கு அஞ்சுகின்றார்கள் இல்வாழ்க்கையில் தோல்வி அடைகின்றார்கள், உலகத்துக்கு அஞ்சாதவர்கள் இவ்வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றார்கள். உலகமும் வேண்டும் இல் வாழ்க்கையும் வேண்டும். ஆனால் ஒன்று வீட்டுக்கு வெளியே; மற்றொன்று வீட்டுக்கு உள்ளே. வாசற்படிக்கு உள்ளே உலகம் வந்தால், அன்பான மனங் களில் அல்லல் புகுந்துவிடும்.”