பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

  • உள்ளதைக் கொண்டு மகிழவேண்டும், வியாபாரம், செல்வம் இவற்றில் மட்டும் அல்ல; மனைவியோடு வாழும் வாழ்க்கையிலும் இதுவேண்டும். மனைவியிடம் அளவுக்கு மேல் அன்பு, பணிவு, அடக்கம், ஒழுக்கம், அழகு, ஆர்வம் எல்லாவற்றையும் எதிர்பார்த்தால் கடைசியில் ஏமாந்து வருந்த வேண்டி ஏற்படும்.’ * “மனப்பொருத்தம் இல்லாத கணவனும் மனைவியும் ஒரு வீட்டில் இருந்து நாள்தோறும் போராடுவதைவிட, தனித்தனியே இருந்து, உரிமையோடு நாளைக் கழிக்கலாம்.”

‘நமக்கு உள்ள நெருங்கிய செல்வம் இரண்டு. ஒன்று மனம். மற்றொன்று உடம்பு. மனத்தையும் நல்ல வழியில் காப்பாற்றி, உடம்பையும் நோய் இல்லாமல் காப்பாற்றினால் அந்த வாழ்க்கைதான் வெற்றி மிகுந்த வாழ்க்கை, உடல் நோயற்றிருப்பது முதல் இன்பம். மனம் கவலையற்றிருப்பது இரண்டாம் இன்பம், உயிர் பிறர்க்கு உதவியாக வாழ்வது மூன்றாம் இன்பம்.” * ‘இது பரந்த உலகம். இங்கே எல்லாம் உண்டு. ஆனால் மனம் குறுகி நிற்காமல் பரந்து விரிய வேண்டும், மனம் இருந்தால், எல்லா வாழ்வும் உண்டு. இல்லை என்ற குறைக்கே இந்த உலகத்தில் இடம் இல்லை.” * ஒவ்வொரு நாளும் கடவுள் வழிபாடு செய்தல் நன்மை பயக்கும் ; உள்ளத்தை உயர்த்தும், அமைதி நல்கும். நாள்தோறும் காலையில் கடமைகளைத் தொடங்குவதற்கு முன்பும், இரவில் கடமைகளை முடித்த பிறகும் அமைதி யாக உட்கார்ந்து கண்மூடி மனத்தை ஒருமைப்படுத்தி வழிபடல் வேண்டும்.” * “குடும்பம் என்றால், ஒருவரின் மனக்கவலையை மற்றவர் குறைப்பதற்காக ஏற்பட்டது. ஆனால் உள்ள