பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. 111

கவலையை வளர்த்து மீளாத்துன்பத்தில் வருந்துவதானால் அந்தக் குடும்பத்தைக் கலைத்துவிடுவதே நல்லது.”

  • தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் இருந்து தனித் கணியாகவும் குடும்பம் குடும்பமாகவும் நாடு நாடாகவும் அழிந்தது போதும். இனிமேல் வல்லவர்களாகவும் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல தன்மையோடு வல்லமையும் சேரப்பெற்று வாழவேண்டும்.”
  • இன்பத்திற்குத் துணையாக யாராலும் முடியும்; ஈ எறும்பாலும் முடியும், துன்பத்திற்குத் துணையாக வல்லவர்களையே தேடவேண்டும். உறவானாலும் நட்பானாலும் காதலானாலும் இத்தகையோரையே தேடவேண்டும்.”
  • “சாவு என்பது வாழ்க்கைக்குத் தேவையானது. சாவும் வாழ்வும் சேர்ந்தால் வட்டம். இது இல்லையானால் அது இல்லை. இலை பழுத்து வாடி உதிர்ந்தால்தான்; தழை பசுமையாகத் தோன்றுகிறது. பழுப்பதும் தழைப்பதும் போல்தான் சாவும் வாழ்வும்.”
  • தேவைகளைக் குறைத்துக்கொண்டு எளிய வாழ்வு வாழ்வது என்றைக்கும் நல்லது. அதுவே முதன்மையான தவம். கவலை இல்லாமல் வாழ்வதற்கு அது ஒரு வழி. தேவையே இல்லாமல் ஒரு மனிதன் வாழ முடியாது. தேவைகளைக் குறைத்து வாழலாம். பணம் இருந்தால் உலகத்தில் மதிப்பு உண்டு. பணம் இருந்தால் மற்ற எல்லாம் படிப்படியாக வந்து சேரும். பணம் வைத்துக் கொண்டு வாழ்வதுதான் முதல் கடமை.”

• உலகம் பெண்களுக்குக் கவலையை ஆக்கத் தெரிந்து கொண்டது; ஆனால் போக்கத் தெரிந்து கொள்ளவில்லை."