பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

  • “முன் காலத்தில் எல்லாத் தேவைகளையும் துறந்து விட்டுக் காட்டுக்கு ஒடினார்கள். அது அந்தக் காலத்துத் தவம், தேவைகளைக் குறைத்துக்கொண்டு நாட்டிலேயே வாழ்வது இந்தக் காலத்துத் தவம். இது காந்தியடிகள், டால்ஸ்டாய் முதலானவர்கள் வாழ்ந்து காட்டியது.”
  • “இருக்கிற அளவைவிட அறம் வளர்ந்துவிடப்போவதும் இல்லை; குறைந்துவிடப் போவதும் இல்லை, உலகம் தோன்றிய காலம் முதல் இப்படி ஒரே அளவாக அறமும் பாவமும் கலந்து தான் இருந்து வருகின்றன. நாம் கவலைப்படுவதெல்லாம் வீண். அறம் பாவம் இரண்டையும் காப்பாற்றுகிறார் கடவுள். உண்மை யைச் சொல்லப் போனால், அறம் கடமையுணர்ச்சி உள்ள நல்ல பிள்ளை; பாவம்தான் கடவுளின் செல்லப் பிள்ளை, கடவுள் தாயுள்ளம் உடையவர். தாய்க்கு இரண்டு பிள்ளைகள் இருந்து, மூத்த பிள்ளை எல்லோராலும் பாராட்டப்பட்டு, இளையபிள்ளை எல்லோராலும் தூற்றிக் கைவிடப்பட்டால் தாய்க்கு எந்தப்பிள்ளை மேல் அன்பு மிகுதியாக இருக்கும்? மூத்த பிள்ளை நல்லவன், அவன் எப்படியாவது பிழைத்துக் கொள்வான், மற்றவர்களும் அவனுக்கு உதயி செய்வார்கள் என்று தாய் அவனைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படமாட்டாள். ஆனால் இளையபிள்ளையை எல்லாரும் கைவிட்டு விடுவார் களே, அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று மிகுதியாக அன்பு செலுத்துவாள், கடவுளும் அப்படித்தான் செய்கிறார். இந்த உலகம் தீமையை அழித்துவிடுமே எ ன் று அதற்குத் தான் மிக்க வளர்ச்சியையும் வேகத்தையும் கொடுத்திருக்கிறார்."