பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

அடுத்தபடியாக அவருக்கு இலக்கியம் பிறந்த இடம்

என்று எண்ணிப் பார்க்கிறபொழுது அவர் குறிப்பிடும் செய்தி இயற்கையையும், இலக்கியத்தையும் இணைத்துப் பார்த்த அவர்தம் நெஞ்சம் புலனாகின்றது. அப் பகுதி வருமாறு :

“ஒரு பாட்டு; அதைக் குறித்துப் பல நாள் போராட்டம்; இரண்டு நாள் இரவும் பகலும் ஏக்கம், மூன்றாம் நாள் மாலையில் வேலத்து மலையை அடுத்த அழகிய ஓடையில் உலவும்போது எதிர் பாராத விளக்கம் நல்ல தெளிவால் பிறந்த பேருவகை இவையே இந்நூலாக உருப்பெற்றன.”

(ஒவச்செய்தி, நன்றியுரை)

“ஆதலின் சங்க நூல்களைக் கற்பவர், வாழ்க் கையின் உண்மைகளை மறவாமல் ஆராய்ந்து காண வேண்டும். வாழ்க்கையைப் பற்றிய தெளிவு பெறாத வரும் சங்க இலக்கியத்தைக் கற்று அந்தத் தெளிவு பெறமுடியும். வாழ்க்கையால் இலக்கியக் கல்வியும், இலக்கியக் கல்வியால் வாழ்க்கையும் திருந்தி வளம் பெற முடியும் என்ற உண்மையை இங்குக் காணலாம். இது மட்டும் அன்று, ஒரே வகையான தூய உயர்ந்த அமைப்பு, சங்க இலக்கியம் முழுவதும் ஊடுருவி நிற்ப தால், ஒரு பாட்டைக் கற்பவர்க்கு ஏதேனும் ஐயம் எழுந்தால் மற்றப் பாட்டுக்களின் கருத்துக்கள் முன் வந்து துணை செய்யும்: ஐயம் போக்கும்; உண்மை உணர்த்தும்.”

(சங்க இலக்கியம் பற்றிய மு.வ.வின் கருத்து