பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி. பா. 11

அகநானுாற்றில் ஒரு பாட்டை எடுத்துக்கொண்டு அதை எளிய இருநூறு பக்கங்களில் விளக்கங்கள் வழங்கி யிருப்பதனை ஒவச்செய்தி எனும் ஒரு நூலால் டாக்டர் மு.வ. புலப்படுத்தியுள்ளார். ஒவச் செய்தி எனும் ஒரு நூலே அவர்தம் இலக்கிய வளத்திற்கு இன்றும் சான்று பகன்று கொண்டிருக்கின்றது.

சங்க இலக்கியம் குறித்து அவர் எழுதியிருப்பது சற்று சிந்திக்கத் தக்கதாகும்.

அடுத்தபடியாக அவருடைய நூல் குறுந்தொகைச் செல்வம் ஈண்டு கருதத்தக்கது அந்நூலின் முன்னுரையில் அவர் இலக்கியத்தைத் துய்க்கும் முறையினை இனிது எடுத்துக் கிளத்தியுள்ளார். இலக்கியம் படிப்பவருக்கு அவர் எழுதியிருக்கும் செய்திகள் பெரும் துணை செய்யவல்ல தாகும். இதுபோன்று இலக்கியத்தினை இனிது துய்ப் பதற்கு வழி முறைகளைப் புலப்படுத்துபவர்கள் இக் காலத் தில் இல்லை எனலாம். அப் பகுதி வருமாறு :

“பாட்டுக்கு உயிர் உணர்ச்சி; உடல் கற்பனை; உடை ஒலிநயம், குறுந்தொகைப் பாட்டுக்களில் உடை எளியதாக உள்ளது; உடல் அழகுற அமைந் துள்ளது. உயிர் போற்றத்தக்கதாக உள்ளது. உயிரின் வாழ்வுக்காக உடலும், உடலின் காப்புக்காக உடையும் அமைந்த அமைப்பை இவற்றில் காணலாம். துணுகி யுணரும் செவிப்புலன் வாய்ந்தவர்க்கே, இப்பாட்டு களில் உள்ள ஒலிநயம் (Rhythm) புலனாகும். பிற்காலத்துப் பாட்டுப் போவவோ, கலித்தொகைப் பாட்டுப் போலவோ எளிதில் விருந்தாகும் இசைக் கவர்ச்சி இவற்றில் இல்லை, நுட்பமாக செவி உடைய வராய், எளிமையான நயமே போதுமென அமைப