பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

டாக்டர். மு.வ.வின் சிந்தைை வளம்

வர்க்கே இங்கே விருந்து உண்டு. உடலாகிய கற்பனை யும் அளவுபட்டு அமைந்துள்ளது, தசைநார்த் திரட்சி யும் பெருக்கமும் அமைந்து காண்போரை மருட்டும் உடல் வளர்ச்சி போன்ற கற்பனைகள் சில நூல்களில் உள்ளன. ஆயின், இவற்றில் உள்ள கற்பனை , காந்தியடிகளின் துய உடல் போன்றது; வலிமை மிக்க உடல் அன்று; நலம் நிறைந்த உடல் ஆகும்; இடர்ப்பாடின்றி உணர்ச்சி விளங்குதற்கு ஏற்ற நோயற்ற உடல் ஆகும். எளிய உடை சூழ்ந்து நோயற்று விளங்கும் இந்த அழகிய உடலில் அமைந் துள்ள உணர்ச்சி மாசற்றது; நெறியானது; போற்றத்

தக்கது.”

(குறுந்தொகைச் செல்வம்; முன்னுரை)

சங்க இலக்கியப் பாட்டினை டாக்டர் மு.வ. அவர்

களைப் போல இலக்கிய வளத்தோடு இனிது புலப்படுத்தி, படிப்பவர் மனத்தில் காட்சித் திரைகளை விரித்தவர் இந் நூற்றாண்டில் எவரும் இல்லை என்று துணிவாகக் கூறலாம்.

“விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி

மறந்தனம் துறந்த காழ்முளை அகைய நெய்பெய் தீம்பால் பெய்து இனிது வளர்த்தது நும்மினும் சிறந்தது நுவ்வை யாகும்’ என்று அன்னை கூறினள் புன்னையது நலனே; அம்ம காணுதும் நும்மொடு நகையே...’

எனும் நற்றிணை-172-ஆவது பாடலுக்கு அவர் எழுதி யிருக்கிற விளக்கம் எத்துணை அளவு இலக்கிய வளம் வாய்ந்ததாக உள்ளது என்பதனை மணல் வீடு’ என்ற