பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. 13

அவர் நூலில் இரண்டாவது கட்டுரையாக அமைந்துள்ள ‘உணர்வும் உறவும்” எனும் கட்டுரையில் நன்கு காணலாம்.

“காதலனும் காதலியும் திருமணத்தில் கலந்து இல்லறத் தில் தலைப்பட்டுக் கணவன் மனைவியாக அன்புடனும் பண்புடனும் வாழும் இனிய பெற்றியினைக் கூடலூர் கிழார் பாடிய குறுந்தொகையின் 17-ஆவது பாடலால் ஆறியலாம். அந்தப் பாடல் வருமாறு :

“முளிதயிர்ப் பிசைந்த காந்தள் மெல்விரல்

கழுவுறு கலிங்கம் கழா அது உடீஇக் குவளை உண்கண் குய்ப்புகை கமழத் தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின்

நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே’’

“திருமணம் செய்து இல்வாழ்க்கை தொடங்கிய ஒரு குடும்பத்தில் மனைவி தயிர்க்குழம்பு சமைத்தாள். முற்றிய தயிரைக் தன்மெல்லிய விரலால் பிசைந்தாள். சேர்ப்பன சேர்த்துத் தாளிக்கத் தொடங்கினாள். குறித்த நேரத்தில் விரைந்து தாளிக்கத் தவறினால் நறுமணமும் சுவையும் குன்றுமாதலின் தயிர் பிசைந்த கையைக் கழுவாமலே நெகிழ்ந்த தன் ஆடையை உடுத்திக்கொண்டாள். உடனே தாளிக்கத் தொடங் கினாள். தாளிப்புப்புகை மேல் எழுந்து கண்ணில் பட்டது. புகைக்காகத் தயங்கிச் சிறிது பொறுத் தாலும் சுவைப் பயன் கெடும் என்று அஞ்சி, புகைக்கு இடையே உற்று நோக்கிக் துழாவிச் சமைத்து முடித்தாள். இவ்வாறு சமைத்த இனிய புளிச்சுவை உடைய குழம்பைக் கணவனுக்கு இட்டபோது அவன் ‘நன்றாயிருக்கின்றது என்று பாராட்டியவாறே