பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி. பா. 15

உணவிலும் இனிமை கண்டு போற்றும் ம்னப்பான்மை வருகின்றது.

“புது வாழ்க்கை தொடங்கிய இந்த இளம் பெண் நேற்றுவரையில் எவ்வாறு வாழ்ந்தாள்? தன் மெல்லிய விரல்கள் காந்தள் மலர்போல் விளங்குமாறு மாசு படாமல் காத்துவந்தாள். தாய் வீட்டில் தயிர் பிசைந்தாலும் விரல்களில் அழகுக் குறைவு என்று எண்ணும் மனம் இருந்தது. உடுத்திய ஆடை ஒழுங்கு

தவறாது” மாசு படாதவாறு காக்கும் ஆர்வம் இருந்தது. அழகிய கண்களுக்கு மைதீட்டி அவை குவளை மலர்போல் விளங்குமாறு கா க் கு ம்

அழகுணர்ச்சி இருந்தது. தன் அழகைக் காத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டு, அதை ஒரு கலையாக்கி நாள்தோறும் அழகுபடுத்திக் கொள்வதற் காகச் சில நாழிகை செலவிட்டு வாழ்ந்த இளம் பெண், இன்று புக்ககத்தில் எத்தகைய பெரு மாறுதல் உற்றாள்! தன் அழகு என்ற தன்முனைப்பு அவள் உள்ளத்தை விட்டு அகன்று, கணவன் மகிழ வேண்டும் என்ற வேட்கையால் தியாக உணர்வு வளர்ந்து விட்டது. ஆகவே மெல்லிய விரல்கள் “முளிதயிர்’ பிசைந்தன. துாய ஆடையைத் தயிர் பிசைந்த கைகள் உடுத்தின. தாளிப்புப் புகையில் மையுண்ட கண்கள் மூழ்கின. அன்று அவள் விரும்பியது தன் அழகு அன்று; கணவனின் மகிழ்ச்சியே ஆகும். விரும்பியதைப் பெற்றாள்; அவள் உள்ளம் நிறைந்தது. அந்த நிறைவால் முகத்தில் நுண்ணிய புன்முறுவல் பொலிந்தது.

“அவள் உள்ளத்திலும் தன்னலத்திற்கு இடம் இல்லை; அவன் உள்ளத்திலும் தன்னலம் நீங்கி