பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 டாக்டர். மு. வ.வின் சிந்தனை வளம்

விட்டது. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் போக்கிக் கொள்ளுதற்கு அரிய தன்னலம் எளிதில் போகுமாறு பெரு மாறுதல் செய்தது காதல்.”

(குறுந்தொகைச் செல்வம்)

மேலும், உணர்வோவியமாகச் சங்கப் பாடல்களில் அமைந்திருக்கும் திறத்தினை டாக்டர் மு. வ. அவர்கள் வருணிக்கும் பாங்கும் மனங்கொளத் தக்கதாகும். அதற்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும் பகுதியினைக் கூ றலாம் :

“மாமை நிறம் உடைய இந்த இளம்பெண் நம் தாய் போன்ற கற்பொழுக்கம் உடையவளாகி விட்டாள். மூடிய செம்பில் தனித்துக் கிடந்த பிறர் குடிக்கொள்ளாமலே அழகும் மணமும் இழந்து வாடும் மலர்களைப் போல், தனித்துத் துயருற்று உடல் மெலிந்தாள். கணவன் செய்த கொடுமையை நமக்குச் சொல்லவும் நாணி மறைத்து நடக்கின்றான்” என்று வியந்து பாராட்டினான்,

யாயா சியளே மாஅ யோளே மடைமாண் செப்பின் தமிய வைகிய பெய்யாப் பூவின் மெய்சா யினளே

தண்ணக் துறைவன் கொடுமை நம்முன் நாணிக் கரப்பா டும்மே” -குறுந்-9

“கணவன் மெல்ல வீட்டிற்குள் நுழை ந்தான். தான் செய்த குற்றம் நெஞ்சத்தை வருத்த மெல்ல உள்ளே சென்றான். தன் மனைவி தன்னை வெறுத்துக் கடிந் துரைப்பாள் என்றும், அவளுடைய சினத்தை மாற்ற என்ன செய்வது என்றும் எண்ணியவாறே சென்றான்,