பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1?

டாக்டர். சி. Lfrf.

அவளோ அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக முக மலர்ச்சியோடு எதிரே வந்து இன்சொல் கூறி அன்புடன் வரவேற்றாள். அதனால் தலைவன் நெஞ்சம் அவனை மேலும் வருத்தத் தொடங்கியது. இத்தகைய பெருந்தன்மை உடையவளுக்குத் தவறு இழைத்தோமே என்று நாணினான். இந்தக் காட்சியை ஒதுங்கியிருந்து கண்ட தோழி அவளு டைய பண்பாட்டை நினைந்து மேலும் போற்றி னாள்; மகிழ்ந்து விளையாடும் விளையாட்டில் திளைத்துக் கிடக்கும் இளம் பெண்ணான இவள் நம் தாய்போல் நிறைந்த பண்பாடு பெற்றுவிட்டாளே. கணவன் செய்த கொடுமையை மறைத்தவளாகலின் அவனே நாணுமாறு அன்புடன் எதிர்கொள்ள வரு சிறாள். என்று பாராட்டினாள்.’

காஞ்சி யூரான் கொடுமை கரந்தனன் ஆதலின்காணிய வருமே -குறுந்-10

கொங்குதேர் வாழ்க்கை என்ற அவர்தம் இலக்கிய நூல் கொங்குதேர் வாழ்க்கை என்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடலைப் பற்றிய விளக்க மாகும். ஈண்டும் ஒரு பாட்டினை ஒரு நூலாக விரிந் துரைக்கும் வியத்தகு ஆற்றல்-இலக்கிய ஆற்றல் டாக்டர் மு. வ. அவர்களின் தனித் திறமையேயாகும். இந்நூலில் இலக்கியத்தின் இனிய பெற்றியினை டாக்டர் மு. வ, அவர்கள் புலப்படுத்தும் பாங்கு பாராட்-த் தக்கதாகும். கீழ்க்காணும் பகுதியினைப் படிக்கின்ற பொழுது இலக் இயச் செல்வி எனப்படுவது இன்னதுதான் என்பது

நமக்குப் புரிகிறது.