பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

டாக்டர். மு. வ.வின் சிந்தனை வளம்

இசைக்கும் இல்லாத தனிச்சிறப்பு ஒருவகையில் இலக்கியத்திற்கு உண்டு. இசை நுண்ணிய உணர்ச்சி களை மட்டும் புலப்படுத்த, இலக்கியம் உணர்ச்சி களைப் புலப்படுத்துவதோடு அறிவுக்கும் விருந்தாய் அமைகிறது. அதனால்தான் பாடுந்தோறும் கேட்குந் தோறும் இனிமை பயக்கும் இசைபோல் அல்லாமல் நினைக்குந்தோறும் பேசுந்தோறும் எப்போதும் இன்பம்பயக்கும் தனிச்சிறப்பு இலக்கியத்திற்கு உள்ளது உள்ளத்தைக் கணிவிக்கும் பெருஞ்சிறப்பு இலக்கியத் திற்கு அமைந்திருந்தால்தான் அது பல நூற்றாண்டு களைக் கடந்தும் அழியாமல் வாழ வல்லதாய் விளங்கு இன்றது. ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட பழந் தமிழருடைய ஓவியம் எங்கே சிற்பம் எங்கே? நாடகம் எங்கே? இசையும் எங்கே? சில மறைந்து போயின; சில:திரிந்து நிற்கின்றன. பழந்தமிழ் இலக்கியம் ஒன்று தான் இன்றுவரையில் நாம் பெற்று மகிழும் பெருங் கலைச் செல்வமாய்த் திகழ்கிறது. தலைமுறை தலை முறையாக மக்கள் நினைந்து நினைந்து மகிழ்ந்து போற்றிக் காத்து வருதற்குரிய கலைச் செல்வமாக உள்ளது இலக்கியம்.

“இத்தகைய இலக்கிய மணத்தைத் தேர்ந்தறியும் பேறு பெற்ற தும்பிகளே புலவர்கள். மற்ற மக்கள் பணத்தையும் பதவியையும் உணவையும் இதையும் அதையும் தேர்ந்தறிய வல்லவர்களாக விளங்க இந்தப் புலவர் பெருமக்கள் மட்டுமே இலக்கிய மலர்களை நாடிக் கொங்கு தேர்ந்தறியும் பேறு பெற்றவர்களாக விளங்குகின்றார்கள்.

ஆயின் தும்பிகளுக்கு வாய்த்த வாழ்க்கை தனிச்சிறப்புடையது. கொங்கு தேர்தலைத் தும்பி