பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்ட f. சி. பா. fg

பொழுது போக்காகக் கொள்ளவில்லை; அதையே வாழ்க்கையாகக் கொண்டுள்ளது. கொங்கு முகர்ந்த வாறே உள்ளத்தால் வேறு எதையும் நாடுவதில்லை. அதன் உள்ளம் ஒன்றிய வாழ்க்கை கொங்குதேர் வாழ்க்கை. -

“இலக்கிய இன்பத்தைப் பலரும் நுகர்கிறார்கள். எந்தெந்தத் துறையிலோ வாழ்க்கையை நடந்திக் கொண்டே பொழுதுபோக்காக இலக்கியத்தை நாடு கிறார்கள், ஒரு சில வேளைகளில் இலக்கியத்தின் பக்கமாகத் தலையை நீட்டுகிறார்கள் என்று கூறலாம்; அவர்களின் மேல் குற்றம் இல்லை; அவர்கள் வாழ்க்கை அப்படி அமைந்தது, அவர்களைப்போல் அல்லாமல் இலக்கியத் தொண்டையே தொழிலாகக் கொண்டவர்கள் சிலர். அவர்களிலும் வயிற்றுப் பிழைப்புக்காக அதைச் செய்துவிட்டு உள்ளத்தால் வேறொன்றை எண்ணி ஏங்குவோரும் உள்ளனர். அவர்களைப்போல் அல்லாமல் இலக்கியத் துறை யையே உள்ளம் உவந்த தொழிலாகவும் தொண் டாகவும் ஏற்று மகிழ்கின்றவர்கள் ஒருசிலர்; அவர் களே இலக்கியத்தும்பிகள்; கலை உலகத்தில் கொங்கு தேர் வாழ்க்கை உடையவர்கள்.

“சிறகுகள் என்றவுடனே கற்பனை, அல்லது பாட்டு, அல்லது கலைஞரின் வாழ்க்கை நினைவுக்கு வருதல் இயல்பு.

“பறவைகள், புறத்தே சிறகுகள் பெற்று வாழ் கின்றன : கலைஞர், அகத்தே கற்பனை என்னும் சிறகுகள் கொண்டு பறந்து வாழ்கின்றனர். பறவைகள் வான வெளியை அளக்கின்றன; கலைஞரோ எங்கும்