பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

żó

. . - o o o d டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

எதையும் அளந்து உணர்கின்றனர்; மற்ற உயிர்களின்

உள்ளமெல்லாம் பறந்து திரிந்து அவைகள் உணர்வன எல்லாவற்றையும் அளக்கும் ஆற்றல் உடையவை கற்பனைச் சிறகுகள். *

“எவ்வாறோ, கலைஞரின் வாழ்க்கை பறவை களின் வாழ்க்கையை நினைவூட்டுவதாக உள்ளது.

‘மனிதன் நத்தையும் நண்டும்போல, ஆடும் மாடும்போல, மண்ணிலே பிறந்து மண்ணிலே வாழ் கின்றவனே ஆயினும் அவன் மனம் பறவைபோல் உயரஉயரப் பறந்து வானத்தில் தவழும் இயல்பினது. இவ்வாறு பறக்கும் இயல்புடைய மனத்திற்கு அமைந்த சிறகுதான் கற்பனை என்பது. -

“மனம் கனவிலும் பறந்து திரிகின்றது; நனவிலும் பறந்து திரிகின்றது. கனவில் பறந்து திரியும்போது நம் விருப்பம்போல் பறக்க முடிவதில்லை. கள் உண்டவன் தன்வயம் இழந்து கள்ளின் மயக்கத்திற் கேற்ப இயங்குவதுபோல், கனவும் உறங்கும் நிலையில் அறிவின் மயக்கத்திற்கேற்ப நம் வயம் அன்றி நடை பெறுகின்றது, ஆதலின் நனவில் பறந்து திரியும் மனமே பெருமைக்கு உரியது.

நனவில் பறக்கும் மனத்தின் ஆற்றல் அதன் கற்பனைத் திறனுக்கு ஏற்றவாறு அமையும். உயர்ந்த கற்பனைகளிலே பழகியவரின் மனம் உயர்ந்த எல்லை களில் பறக்கவல்லதாம்; இழிந்த கற்பனைகளில் பழகியவரின் மனம் தாழ்ந்த எண்ணங்களிலே சுழலும். பேராசையும் பொறாமையும் பகைமையும். கொண்ட ஒருவன் தன் ஆக்கத்தையும் பிறன் அழிவையும்