பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி. LIIT. - 31

பற்றிக் கற்பனைகள் செய்து குறுகிய எல்லைகளில் வாழ்நாளைக் கழிப்பான்.

“இத்தகைய அழகிய கற்பனைச்சிறகு வாய்ந்த புலவர்கள் தாம் இன்புற விழைகின்ற நெஞ்சத்தினர்: தாம் பெற்ற கற்பனை இன்பத்தைப் பிறரும் பெற வேண்டும் என்ற ஆர்வத்தினர். தாம் முயன்று எய்திய கற்பனை உலகத்தைப் பிறரும் எய்த வேண்டும் என்ற வேட்கையால் காவிய ஏணிகள் அமைத்துத் தரும் கருணையாளர். உண்மையாகவே காவியங்கள், உயரப் பறக்கும் மனம் இல்லாதவர்க்குக் கைகொடுத்து உயர இழுத்துச் செல்லும் கருவிகள், இத்துணைச் சிறப்பு அமைந்த காவியங்களைப் படைத்து உயர்ந்த வாழ்வு வாழுமாறு தூண்டுகின்றவர்களே புலமைத் தும்பிகள்.

“பழங்காலத்துச் சான்றோரின் உ ள்ளத்தில் உயர்ந்த உறவுக்கு உவமை தேடியபோது தும்பியின் தேன்கூடு அல்லது புலவரின் காவியம் உவமையாக வந்தமைந்தது. மலர்களின் கொங்கு தேர்த்து தும்பி இயற்றும் தேன்கூடும் இலக்கியங்களை ஆராய்ந்து புலவர் இயற்றிய காவியமும் சான்றோர்க்கு ஒரு நிகராகத் தோன்றின போலும்.

Η: Τι

தேன் நுகரும் தும்பிகள் பாடி மகிழ்வன; கூடிக் களிப்பன. பாடாமல் இருந்தாலும் அவைகளால் இயலாது; ஒருங்கே கூடாமல் இருந்தாலும் அவை களால் இயலாது. இந்த இரு பெற்றியும் இலக்கியத் தும்பிகளாகிய புலவரால் இயலாது. தம் போன்ற மற்றப் புலவர் பெருமக்களோடு அளவளாமல் இருத்தலும் இயலாது.”

-கொங்குதேர் வாழ்க்கை; ப : 35-4.2 à —2 ----------

S S S S S S S S S S S S S S S S S STS SS - * - - -o