பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

முல்லைத் திணை என்பது தமிழிலக்கியத்தில் கற்புத் தொடர்புடைய ஒரு சொல்லாகும். இந்த முல்லைத் திணையை அறிமுகப் படுத்தி மூல்லைத்திணை’ என்ற ஒரு நூலினை டாக்டர் மு.வ. அவர்கள் படைத்துள்ளார்கள். அந்த நூலை படிக்கிறபொழுது முல்லைத்திணையைப் பற்றி, அதன் இலக்கியப் பின்னணியினைப் பற்றி அறிந் தவர்கூட அறிந்துகொள்வதோடு அந்த முல்லைத் திணை விளக்கும் கற்பு நெறியினை இளம்கண்டு பாராட்டுகின்ற அளவிற்குத் தம்மைப் பதப்படுத்திக்கொள்கின்றவர்களை யும் காணமுடியும். ஒரு தொடரை, ஒரு சொல்லை. ஒர் அடியை, உயிர்ப்பொருளை, ஒர் ஒழுக்கத்தினை எவ்வாறு அறிமுகப்படுத்தவேண்டும் என்றதற்குப் பின்வரும் பகுதி எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

“மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்து நாகரிகத்தை வளர்ப்பதற்கு ஏற்ற நிலப் பகுதி இதுவே ஆகும். குறிஞ்சி நிலமாகிய மலைப் பகுதியில் மனிதன் இயற்கையை எதிர்த்து வென்று வயிறு வளர்க்கவேண்டும். வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தில் மனிதன் இயற்கையை எதிர்பார்த்து நிற்காமல் உழைத்துப் பாடுபட்டு வயிறு வளர்க்கவேண்டும். கடற்பகுதியாகிய நெய்தல் நிலத் தில் வாழும் மனிதன் மற்ற நிலப்பகுதிகளின் உதவியை எதிர்பார்த்து வாழவேண்டும். முல்லை நிலத்தில் இயற்கையை எதிர்பார்த்து நம்பி வாழ வேண்டும். அங்கு வாழ்க்கை துன்பமாகத் தோன் றாமல் பொழுதுபோக்காகத் தோன்றக்கூடிய வகை யில் இயற்கை மனிதனுக்குந் துணை செய்கிறது. ஆதலின் கவலை குறைந்த இனிய எளிய வாழ்க்கை முல்லை நிலத்தில் அமைந்திருக்கிறது.