பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. - 23

“மனிதன் நாகரிகம் பெற்று வளரத் தொடங் கியது முல்லை நிலத்திலேயே ஆகும். மக்கள் ஒர் இனமாய்க் கூடிச் சமுதாயமாய் அமைந்தது முதல் முதலில் முல்லை நிலத்திலாகும், அதனால்தான், முல்லை நிலத்தில் பசுக்களை மேய்ப்பதற்கு உதவும் கருவியாகிய கோல், மக்களினத்தின் தலைவனுடைய ஆட்சிக்கு அறிகுறியாக அமைந்தது. அவன் ஏந்திய கோல் அவனுடைய குடிமக்கள் கோலாக நின்றது. அவன் நல்ல முறையில் நேர்மையாக ஆளும் காலத் தில் அந்தக் கோல் செங்கோல் எனப் புகழப்பட்டது. நாகரித்தின் தொடக்கமாகிய அக்காலத்தில் அந்தத் தலைவனுக்குச் செல்வமாக விளங்கியவை மாடுகளே. அதுபற்றியே மாடு என்றால் செல்வம் என்னும் பொருளும் அமைந்தது.

“இவற்றால், இனமாய்க் கூடி ஆட்சிமுறை

அமைத்துச் செல்வம் சேர்த்த நாகரிகம் முல்லை நிலத்தில் தோன்றியதை உணரலாம்!”

-முல்லைத்திணை! 5 ப,5-6.

நடைவண்டி என்ற அவருடைய இலக்கிய நூல் அந்தத் தலைப்பிற்கேற்பவே ஒரு குழந்தை நடை பயில்வதற்கு நடைவண்டி எப்படிப் பயன்படுகிறதோ அதுபோலவே இலக்கியம் கற்பவர்க்கு நடைவண்டி எனும் நூல் அருந் துணையாக அமைவதனை விளக்கி நிங்கின்றது.

“நங்கை ஒருத்தி நம்பி ஒருவனிடம் காதல் கொண்டாள். அவனுடைய அழகை மட்டும் கண்டு போற்றிக் காதல் கொள்ளவில்லை. அவனுடைய உள்ளப் பண்பையும் ஒருவாறு உணர்ந்து நம்பிக்கை கொண்ட பிறகே காதல் கொண்டாள். அவனும் அன்