பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

வாறு அவளுடைய அழகையும் பண்பையும் உணர்ந்து போற்றியே காதல் கொண்டான். இருவர் காதலும் வளர்ந்துவந்தன. இந்த வளர்ச்சிக்குத் தோழி ஒருத்தி துணையாக இருந்தாள். அந்தத் தோழி வாழ்க்கைப் பொறுப்பை நன்கு உணர்ந்தவள். ஆதலால் அ றிவுரைகளைக் கூறியும் நெறிகளை உணர்த்தியும் அவ்வப்போது இருவர் நெஞ்சத்தை யும் பண்படுத்திவந்தாள்.’

-நடைவண்டி: L1, 18

புலவர் கண்ணிர் எனும் அவர்தம் நூல் இலக்கியம் மனிதமனத்தை எவ்வாறு ஆழமாகச் சென்று தாக்கவல்லது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதனைக் காணலாம். புலவர்தம் துயர் மறந்து பிறர் துயருக்காக உருகும் நெஞ்சம் மறந்த நிலமையாளன் என்பதனை,

வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே’

-எணமுடியும் குடவாயிற் கீரத்தனாரின் புறநானூற்றுப்

பாடலுக்கு (242) அவர் அ றிமுக உரையாக எழுதியிருக் கும் கருத்துகள் கற்றோர் நெஞ்சம் களிவிப்பனவாகும்.

அன்பு பற்றியும், காதல் பற்றியும் டாக்டர் மு.வ. அவர்கள் தரும் விளக்கம் குறள் காட்டும் காதலர்’ எனும் இலக்கிய நூலில் இனிது அமைந்துளளது.

“அன்பு வாழ்வை இயக்கும் பெருஞ் சக்தி, அதற்கு முன் மற்ற எல்லாம் மறை ந்துவிடும். எவ்வளவு தடை களையுப் கடந்து செல்லும் ஆற்றல் அன்புக்கு உண்டு. காதலரின் அன்பும் அத்தகைய ஆற்றல் உடையது. காதலிக்குக் காதலனுடைய காதல் பற்றியே