பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா * 25

ஐயம் ஏற்படும்; வெறுப்பும் ஏற்படும். ஆனால், காதலன் .ெ பிவந்தவுடன், அந்தப் பழைய அன்பு தலையெடுத்துவிடும்; இடையே தோன்றிய சோர்வு, ஐயம், வெறுப்பு எல்லாம் மறைந்துவிடும். காதலனு டைய அன்பான மொழிகளைக் கேட்டவுடன், அவன் மேல் கொண்டிருந்த கடுமையான எண்ணங்கள் எல்லாம் பறந்து ஓடிவிடும். பழைய அன்பின் வயப் பட்டு நெஞ்சம் குழைந்துவிடும்.

“காதல் ஆற்றல் மிகுந்தது. நெஞ்சத்தின் உறுதி என்னும் கதவை...நாணம் என்னும் தாழ்போட்ட நெஞ்சக்கதவை...இந்தக் காதல் கோடரியாய் உடைத்துத் திறந்துவிடுகிறது. தம்மை வெறுத்து ஒதுக்கியவரின் பின்னே செல்லாத மானம் ஒன்று உண்டு. ஆனால் காதல் நோய் உற்றவர்கள் அறியாத ஒன்று அது. பலமாயங்கள் வல்ல கள்வனாகிய காதலனு டைய பணிவான மொழி என்னுடைய பெண்மையை உடைக்கும் படையாகிவிடுகிறது. அவரிடம் வெறுப்புக் காட்டி ஊடல் கொள்ளவேண்டும் என்று சென்றேன். ஆனால் என் நெஞ்சம் அவரிடம் கலந்து குழைவதைக் கண்டு தழுவினேன். கொழுப்பைத் தீயில் இட்டாற் போல் உருகும் நெஞ்சம் உடைய என் போன்றவர் களுக்கு ஊடல் கொண்டு நிற்போம் என்றும் வலிமை உண்டோ?” என்றாள். o

-குறள் காட்டும் காதலர், ப - 99

ஒரு கடற்காட்சியினை டாக்டர் மு.வ. அவர்கள் வருணிக்கும் பாங்கு நெய்தல் நிலமே நம் கண்முன் வரு கின்ற வகையில் அமைந்திருக்கக் காணலாம் அப்பகுதி வருமாறு :