பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

“கடலில் காக்கைகள் சேர்ந்து நீராடும் காட்சி அழகியதொன்றாகும். கடலில் காற்று மோத அலை களிலிருந்து பிசிர்கள் எழுந்து பொங்குவதும் மற்றோர் அழகிய காட்சியாகும். கடற்கரையில் மணல்மேட்டில் உள்ள நுண்ணிய மணல் துகளைக் காற்று வீசித் துரவும்போது, அவை மெல்லிய ஆடை போல் எழுந்து ஆடுகின்றன.

“செல்வம் மிக்க பெரிய வீட்டில் வரும் விருந் தினரைப் போற்றி மகிழ்வதற்காக மகளிர் முற்றத்தில் பலியாக இட்ட கொக்கின் நகம் போன்ற சோற்றைக் காக்கை தின்னும்.

‘ஆண் காக்கை, நோன்பு நோற்கும் பெண்கள் கொய்து அழித்த அடும்பின் கொடிகளை உடைய மணல் பரப்பில் ஒரு பக்கத்தில் நிறைந்த சூலோடு தங்கிய பேடைக்காக அயிரை மீனைப் பிடிக்க உப்பங் கழியைத் துழாவிப் பார்க்கும்.

‘கடற்கரையில் மணல்மேட்டில் அமரும் நாரை களின் கூட்டம், வெண்ணிற ஆடை உடுத்த படை வீரர்களின் அணிவகுப்புப் போல் புலவர்க்குத் தோன்று கிறது.

‘நாரைக்கூட்டம் குவிந்த வெண்ணிற மணல் மேட்டில் ஏறி வரிசையாக இருக்கும் காட்சி, அரசரு டைய காலாட்படையின் அணிவகுத்த கூட்டம்போல் தோன்றும்.”

மேற்கானும் இவ் வருணணைகள் அவரது நற்றிணைச் செல்வம் (ப : 56-59) எனும் நூல்வழி அறியலாம்,