பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. - - 27

மேலும் சங்க இலக்கியம் பரவ வேண்டும் என்பதற்கு டாக்டர் மு. வ. குறிப்பிடும் கருத்து வருமாறு :

“எவ்வளவு சிறப்புவாய்ந்த இலக்கியமாயினும் அதன் எதிர்காலம், கற்கும் மக்களைப் பொறுத்தே அமைகின்றது. ஒரு புறம், அதனை ஆழ்ந்து கற்று உணரும் புலவரும் வேண்டும். மற்றொருபுறம், அதன் கருத்தை உணர்ந்துபோற்றிப் புகழும் பொதுமக்களும் வேண்டும். பொது மக்களின் உள்ளத்தில் இடம் பெறாமல், புலவர் நெஞ்சில் மட்டும் வாழும் வாழ்வு போதாது. பொது மக்களின் புறக்கணிப்பு, இலக்கியத் தின் எதிர்கால வாழ்வுக்கு இடையூறாகும்.

‘சங்க இலக்கியம் என்றால் என்ன என்று அறி யாதவரும், அந்தத் தொடரைக் கேட்டறியாதவரும் பலர். இந்த நிலை தமிழகத்தில் இனியும் நீட்டித்தல் நன்றன்று. சங்க இலக்கியம் என்றால், எமது எமது என்று பெருமிதத்துடன் எண்ணும் நெஞ்சமும், கூறும் நாவும் இனி மிகுதல் வேண்டும். ஷேக்ஸ்பியர் போன்ற புலவர் பெருமக்களின் நூல்களுக்கு அத்தகைய சிறப் பான வாழ்வு அமைந்திருத்தலை மேற்கு நாட்டவரி டையே காணலாம்.” - -

-நெடுந்தொகை விருந்து; முன்னுரை; ப : 3, 4.

குருவிப்போர்’ எனும் தம் இலக்கிய நூலில் வாழைத் தாய் என்ற கட்டுரையில் அவர் வழங்கியுள்ள செய்திகள் இலக்கியக் கட்டுரை எழுதுவோர்க்கு இனிது பயன்படும். அவை வருமாறு :

“தாய்மையின் சிறப்பை விளக்குவதற்கு அவர் பற்பல சான்றுகளைக் காட்டத் தொடங்கினார்