பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

மாணிக்கவாசகர் இறைவனை, அம்மையே அப்பா” என்று விளித்தபோது முதலில், அம்மையே என்றது தாய்மையின் சிறப்பாலேயே என்றார். மொழி தந்தைமொழி என்று கூறாமல், தாய்மொழி என்றது ஏன் என விளக்கினார். தாயின் அன்புதான் கைம் மாறு கருதாதது என்றார். அன்பு மிக்க காதலரும் ஒருவரிடமிருந்து ஒருவர் ஏதேனும் நன்மை எதிர் பார்ப்பதாகவும், பெற்ற தாய் தன் குழந்தையிட மிருந்து எந்த உதவியும் எதிர் பாராமல் அன்பு ஒன்றே கருதி வளர்ப்பதாகவும் எடுத்துரைத்தார். கோழி யிடம் இந்தத் தாய்மை சிறந்து விளங்குவதாகச் சொல்லி, தாய்க்கோழி தான் தின்னாமலே தன் குஞ்சு களை அழைத்துத் தின்னச் செய்யும் அன்பை விளக் கினார்; கன்று ஈன்ற பசுவின் அன்புநெஞ்சத்தை விரித்துரைத்து, கற்றாவின் மனம் போலக் கசிந்துருக

புலப்படுத்தினார்.

வயிற்றில் பிறக்கும் மக்களுக்காகத் தன் வாழ் வையே தியாகம் செய்யும் மனப்பான்மையையும் தாயிடமே காணமுடியும் என்று அவர் அழுத்தந் திருத்தமாகக் கூறினார். நண்டு தேள் ஆகிய உயிர் கள் குஞ்சுககளை ஈன்றதும் மாய்ந்துவிடும் தன்மை யைக் குறிப்பிட்டார். வாழையும் ஏறக்குறைய இப் படித்தான் என்று சொன்னார். ஆனால், குலை தள்ளிய பிறகே (தாறு ஈன்ற பிறகே) மாய்கின்றது என்னும் வேறுபாட்டையும் எடுத்துக்காட்டினார்.”

-குருவிப்போர்; ப - 31-33