பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. 29

தமிழின் முதற் காப்பியமாம் சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகளைத் தமிழ்நாட்டிற்கு இலக்கியப் பண் புகள் மிளிர அறிமுகப்படுத்தியவர் டாக்டர் மு.வ. என்றே கூறலாம். இளங்கோவடிகளைத் தமிழராக, கலைஞ ராக, அறவோராகப் பார்த்த நெஞ்சம் டாக்டர் மு.வ. அவர்களுடைய் நெஞ்சமாகும். இளங்கோவடிகள் எனும் நூலில் கலைகளில் சிறந்தது இலக்கியக் கலை’ என்று குறிப் பிட்டது. மு.வ. அவர்களின் இலக்கிய ஈடுபாட்டினை இனிது புலப்படுத்தும்,

‘கலைகளில் சிறந்தது இலக்கியக் கலை. கால வெள்ளத்தைக்கடந்து நெடுங்காலம்நிற்கவல்ல ஆற்றல் மிக்க கலையும் அதுவேயாகும். தமிழ்நாட்டு மாமல்ல புரத்துச் சிற்பங்களைப் பார்க்கப் பலர் வருகின்றனர். உலகத்துப் பல நாடுகளிலிருந்தும் வருவோர் மாமல்ல புரத்தைக் கண்டு வியந்து பாராட்டுகின்றனர். இசை ஒவியம் முதலான மற்றக் கலைகளைவிட அழியாமல் திரியாமல் நெடுங்காலம் வாழும் திறன் சிற்பக் கலைக்கு உண்டு. ஆயினும் கால வெள்ளம் அதனை யும் சிதைக்கின்றது; திரிக்கின்றது. மாமல்லபுரத்துச் சிற்பங்களில் சிதை பொருளையும் காணலாம். திரி பொருளையும் காணலாம். அவை ஆயிரத்து முந் நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இளங்கோவடிகள் இயற்றிய காவியக் கலையோ பதினைந்து நூற்றாண்டு களுக்கு முற்பட்டதாகும். அந்தக் கலை சிதைவும் திரிபும் எதுவும் நேராமல் இளங்கோவடிகள் படைத்தது படைத்தவாறே விளங்கக் காண்கிறோம்.”

-இளங்கோவடிகள்: լյ: 100