பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

டாக்டர் மு.வ. அவர்கள் இலக்கியங்களின்பால் நிறைந்த ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது அவர்தம் கூற்றால் விளங்கக் காணலாம்.

“தமிழகத்தின் முழுமணிகளாய் விளங்கி உல கிற்கு ஒளி பரப்பி வருவன சில. அவற்றுள் இங்குக் குறிக்கத் தக்கன இரண்டு; ஒன்று, திருவள்ளுவரின் திருக்குறள்; மற்றொன்று கண்ணகியின் கற்பு.”

-கண்ணகி; முகவுரை: ப - 55

அடுத்து, இலக்கியக் கல்வியினை எவ்வாறு எய்த வேண்டுமென்பதற்கு டாக்டர் மு.வ. அவர்கள் தரும் விளக்கம் வருமாறு:

“இலக்கியக் கல்வி பயன்படவேண்டுமானால், இலக்கியத்தை முதலில் உணர்ந்தறிய வேண்டும்; பிறகு ஆய்ந்தறிய வேண்டும். அப்போதுதான் இலக் கியத்தை நன்கு கற்கவும் முடியும்; கற்றதனால் பயன் பெறவும் முடியும்.

‘உணர்ந்தறிவது என்பது இதயம் கொண்டு இலக்கியத்தை உணர்வது; புலவர் உணர்ந்தவாறே கற்பவரும் உணர முயல்வது; நூல் எழுதிய காலத்துச் சூழ்நிலைக்குள் புகுந்துநின்ற புலவர் காட்டியவாறு காண்பது, ஏன் எவ்வாறு என்ற கேள்விகள் அறியாமல் தன்னை மறந்து கற்பது; அறிவு குற்றேவல் செய்ய, உணர்வு முன் நின்று உணர்த்த, உணர்ந்து கற்கும் முறையாகும் இது.

ஆய்ந்தறிவது என்பது மூளை கொண்டு நுணுகி இலக்கியத்தைக் கற்பது; புலவர் உணர்த்திய வற்றை இன்றைய உண்மைகளைக் கொண்டு