பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. - - 31

சீர்தூக்கிக் கற்பது; அவர் கா ல த் து வாழ்க் கையை இக்காலத்து வாழ்க்கையோடு ஒப்பிட்டு ஆராய்வது; எதற்கும் காரணகாரியப் பொருத்தம் கண்டு கற்பது; அறிவு தலைமை தாங்க, உணர்வு

உற்றுழி உதவ, ஆராய்ந்து கற்கும் முறையாகும் இது.”

கண்ணகி எனும் இலக்கிய நூலில் கண்ணகி குறித்து டாக்டர் மு.வ. அவர்கள் வழங்கும் கருத்துகள் வருமாறு:

‘கற்பின் ஞாயிறு கண்ணகி, தமிழகத்தின் கீழ்த் திசையில் தோன்றிக் கற்பொளி பரப்பி விளங்கியது: சோழநாட்டின் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினம் திருமண வாழ்த்தொலியைக் கேட்டது. தமிழகத்தின் நடுவே அந்த ஞாயிறு கடுமையாய்க் காய்ந்தது; பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரை, சீற்றம் மிக்க வீரவுரையைக் கேட்டது. தமிழகத்தின் மேற்குத் திசையில் அந்த ஞாயிறு சாய்ந்தது; மறைந்தது; சேர நாட்டின் தலைநகராகிய வஞ்சிமாநகரம் வழிபாட்டின் வாழ்த்தொலியைக் கேட்டது.”

-கண்ணகி; ப: 110

‘மாதவி எனும் நூலில் இறுதியில் மாதவி குறித்து மு.வ. அவர்கள் கூறும் கருத்துகள் வருமாறு:

‘கோவலன் கண்ணகியிடத்தும் காதல் கொண் டாள்; மாதவியிடத்தும் காதல் கொண்டான். கண்ணகியுடன் வாழ்ந்த வாழ்க்கையில் எளிமையும் துாய்மையுமே கண்டான்; கலையும் திறனும் காண வில்லை. கொண்ட குறிக்கோளும் பெற்ற பண் பாடுமே போதும் என்று வாழ்ந்தவள் கண்ணகி