பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

கணவனுடைய மனவளர்ச்சிக்கு ஏற்றவாறு தானும் கற்று வளர விரும்பவில்லை; கற்பனவும் இனி அமையும், காதலனுடைய அன்புதான் வேண்டும்” என்று எந்த உணர்வையும் நாடாமல் நின்றாள்.

“கண்ணகியின் வாழ்வுகணவனுக்காகவே வாழ்ந்து கணவனுக்காகவே முடிந்தது. மாதவியின் வாழ்வு காதலில் நின்று பிறகு அதையும் கடந்து அறத்துறை யில் சென்றது. மனம் மாறிய மாதவி, பிறந்த குடும் பத்தின் தீமையை வேருடன் களைந்தாள். அது போன்ற மற்றக் குடும்பங்களின் சீர்திருத்தத்திற்கு வழிகாட்டியாக விளங்கினாள். பெரும் புரட்சி செய் தாள், உலகம் புகழுமாறு உயர்நிலை உற்றாள்

மாதவி.’ - -

-மாதவி, ப : 86-87

ஒரு பாட்டிற்கு விளக்கமாக ஒரு நூலே எழுதும் திறம்

பெற்ற டாக்டர் மு.வ. அவர்கள் ஒரு பாட்டிற்கு ஒருபக்கமே விளக்கமாக எழுதின எளிய சொற்களால் அரிய கருத்து களைப் புலப்படுத்தியிருக்கும் பாங்கு எண்ணிப் பார்க்கத் தக்கதாகும். பெருங்கண்ணன் எனும் குறுந்தொகைப் புலவர் பாடிய பாடல் வருமாறு:

“புள்ளும் புலம்பின; பூவும் கூம்பின;

கானலும் புலம்புநனி உடைத்தே; வானமும் நம்மே போலும் மம்மந்த்து ஆகி எல்லை கழியப் புல்லென் றன்றே இன்னும் உலானே தோழி இந் நிலை தண்ணங் துறைவர்க்கு உரைக்குகர்ப் பெறினே’

-குறுந்தொகை : 310.

இப் பாடலுக்கு விளக்கமாக மு.வ. அவர்கள் தரும்

செய்தி ருமாறு :