பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. - 33

‘திருமணத்திற்குப் பொருள்தேடச் சென்ற தலைவன் பிரிந்து பல ஆண்டுகள் ஆயின. மாலை நேரங்களில் தலைவியின் துயரம் பெருகிற்று, பறவை களின் ஒலி, மலர்கள் குவிதல், கடற்கரைச் சோலை யின் அமைதி, வானத்தில் ஒளி குறைதல் இவை யாவும் மாலைப்பொழுது வந்ததையும் இன்னும் தலைவன் வராததையும் நினைவூட்டி அவளை மேன்மேலும் கலங்கச் செய்தன. இந்த நிலையில் தலைவி தான் உயிர்வாழப் போவதில்லை என வருந் தினாள். எனினும், தலைவனிடம் தூது சென்று அறிவிப்பவர் யாரேனும் இருந்தால் இன்னும் உயிர் வாழ இயலும் எனத் தோழியிடம் கூறினாள்.

“பறவைகளும் ஒலித்தன. மலர்களும் கூம்பின. கடற்கரைச் சோலையும் தனிமைமிக உடையதாகி, பகலின் ஒளி குறையவே பொலிவு அற்றதாயிற்று. இன்னும் யான் உயிரோடு இருப்பேன் தோழி; இந்த என் நிலைமையைத் தலைவர்க்குத் துரது சொல்வோர் வாய்த்தால் இன்னும் உயிரோடு இருப்பேன்.”

--குறுந்தொகை விருந்து; ப: .

“தமிழ் நெஞ்சம் என்ற தம் நூலில் இலக்கியத்திற்கும் அறிவியலுக்கும் இடையே அமைந்துள்ள வேறுபாடுகளை மு.வ. அவர்கள் விளக்கமாக விரித்துரைத்து உள்ளார்கள். மேலும் மு.வ. அவர்கள் சிக்கலான பாலியல் செய்திகளை உவமை நயத்துடன் எளிமையாக விளக்கியுள்ளார்கள்.

டாக்டர் மு.வ. அவர்கள் ஒர் உயர்ந்த இலக்கியப் படைப்பாளர்; அதேநேரத்தில் அரிய இலக்கியங்களை எளிமையாகப் பழகு தமிழில் உணர்ந்தியவர். பலாப்