பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. டாக்டர் மு.வ. வின். புதின வளம்

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் நன்கு அறிமுக மான பெயர்-ஒலிக்கின்ற பெயர் டாக்டர் மு.வ. என்பதாகும். அப்பொழுதெல்லாம் திருமணம் நடைபெறுகிற தென்று சொன்னால் அந்த வீட்டில் டாக்டர் மு.வ. அவர்களுடைய நாவலைப் பரிசாகக் கொடுப்பார்கள். இவர்கள் தமது ‘செந்தாமரை” தொடங்கி வாடாமலர் வரையில் ஒவ்வோர் ஆண்டு விடுமுறையிலும் ஒரு நாவல் எழுதினார்கள். இதற் கென ஒரு திட்டம் வைத்திருந்தார்கள். ஒருமுறை எந்த வசதியும் இல்லாத ஒரு பள்ளிக்கூடத்தில் நாவலை எழுதிக் கொண்டிருந்த பொழுது அந் நாவலில் ஒரிடத்தில் தன்னையும் அறியாமல் அழுது விட்டதை ஒரு சிறுவன் பார்த்துவிட்டு அருகில் உள்ளவர்களிடம் ஒடிப்போய் அங்கு ஒருவர் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறார் என்று அவன் கூறிய பிறகு தான், அவருக்குத் தான் அழுததே தெரியவந்தாகக் கூறுவார்கள். இதை இங்குக் குறிப் பிடுவதற்குக் காரணம், அவர்கள் நாவல் எழுதுகிற பொழுது அந்த நாவலின் பாத்திரத்தோடு ஒன்றிப் போய் விடுவார்கள்.

அடுத்து, பாத்திரப்படைப்பு என்று நாம் பார்க்கிற பொழுது, அவர் தாம் சந்தித்த சமுதாயத்தில், அவரது வாழ்க்கையில் தாம் சந்தித்த மனிதர்களை, அவற்றிற்கு உணர்வும் உயிரும் கொடுத்து நாவலாக