பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - - டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

ஆக்குவார்கள். சாதாரணமாக நாவல் எழுதுவதற்கு முன்பு அதில் உள்ள பாத்திரங்களைப் பற்றிய குறிப் பினை எழுதிக்கொள்வார்கள். கயமை’ என்ற ஒரு நாவலில் இடம்பெறும் ஆணவர் என்ற பாத்திரத்தை எடுத்துக்கொண்டால், இந்த ஆனவர் இன்னவரைப் போன்றவர் என்று கல்இ அவர்களைப் போன்று குறிப்பு எழுதிவைத்துக் கொள்வார்கள். இப்படி, தாம் சந்தித்த சமுதாயத்தில், கானும் மனிதர்களுக்கு உணர்வும் உயிரும் கொடுத்து தம் நாவல்களை ஆக்கினார்கள்.

ஒரு முறை சேலத்தில் நாமக்கல் கவிஞர் அவர் களுக்கு, பொற்கிழி வழங்கும் விழா ஒன்று நடந்தது. அப் போது ஓமத்துார் இராமசாமி ரெட்டியார் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தார். அவர்களோடு, டாக்டர் மு.வ. அவர்களும், கல்கி அவர்களும் ரயிலில் முதல் வகுப் பிலே பயணம் செய்தனர். கல்கி அவர்கள் முதல் அமைச் சரிடம் டாக்டர் மு.வ. அவர்களை அறிமுகப்படுத்திப் பேசும்போது, “இவர்தான் டாக்டர் மு.வ. இவர்கள் பச்சையப்பன் கல்லூரியிலே பேராசிரியராக இருக்கின்றார்” என்றெல்லாம் கூ றிவிட்டு, “இன்று தமிழ்நாட்டிலே இவருடைய நாவல்கள்தான் என்னுடைய நாவல்களைவிட அதிகம் விற்பனையாகின்றன” என்று சொல்லி இருக் கின்றார். உடனே ஓமந்துார் இராமசாமி ரெட்டியார் அவர்கள் சற்று அயர்ந்து இருந்துவிட்டு. “உண்மையிலேயே சொல்கிறீர்களா? உங்கள் நாவல்களைவிட இவர் எழுதிய நாவல்கள் அதிகம் விற்கின்றனவா.” என்று வியந்து கேட் டார்களாம். அதற்கு: கல்கி அவர்கள் “ஆமாம், என் நாவல் களைவிட இவர் நாவல்கள் அதிகம் விற்கின்றன” என்று

đ#n. றினார்களாம். இது ஒரு நிலை.