பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. - 37

ஆனால், தொடக்கத்தில் இவருடைய முதல் நூலை வெளியிட யாரும் முன்வரவில்லை. இவருடைய முதல் நாவலான செந்தாமரை’க்கு முதலில் இவர் வைத்தபெயர் “முருங்கைமரம் என்பதாகும். அந்தப் பெயர் அத் நாவலுக்குப் பொருத்தமாக இல்லை என்று சொல்லி, அதை மாற்றிச் செந்தாமரை” என்று பெயர் வைப்பதற்குக் 35/TTTGðõT LOITÉE இருந்தவர் அவர்களுடைய முதன்மை மாணவராகிய மதிப்பிற்குரிய பேராசிரியர் ம.ரா.போ. குருசாமி அவர்கள் ஆவர்.

அந்நாவலில் செந்தாமரை என்ற பெண் காதல் வயப் பட்ட ஒரு நிலையில் விளங்குகிறாள். இந்தப் படைப்பில் இடம் பெறுகிற ஒரு பாத்திரம் ஒரு கேள்வி கேட்கிறது. இந்தப் பெண்கள் இந்த நாட்டிலே எப்படி வாழ வேண்டு மென்று பெரியவர்கள் சொல்கிறார்கள் என்று சொன்னால் “வெளியே நிற்கக்கூடாது. கதவை ஒருக்களித்துவிட்டு வெளி உலகத்தைப் பார்க்கலாம். அப்படி வெளி உலகத் தைப் பார்த்தாலும் அங்கே போகிறவர்களிடத்திலே பேசக்கூடாது. அப்படியே பேசினாலும் ஒரு வாக்கியத்தை முழுபையாகப் பேசக்கூடாது என்று இந்த உலகம் சொல் கிறது. இப்படி எந்தத் தொல்காப்பியனாரும் சொல்ல வில்லை.” என்று பேசுகிறது.

இதை நாம் சற்று ஆழ்ந்து பார்ப்போமேயானால், குறுந்தொகை”யின் எதிரொலியாக இதனைப்பார்ககலாம்:

“வரையா கிரையத்துச் செலீஇயரோ அன்னை ஒருங்ாள நகைமுக விருந்தினன் வந்தெனப் பகைமுக ஊரில் துஞ்சலோ இலளே’

-குறுந்தொகை 292 §-3